/* */

கடைசிக் கட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி?: கூட்டணி தர்மத்தை மீறியதாக எடப்பாடி குற்றச்சாட்டு

பாஜகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

HIGHLIGHTS

கடைசிக் கட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி?: கூட்டணி தர்மத்தை மீறியதாக எடப்பாடி குற்றச்சாட்டு
X

எடப்பாடி பழனிச்சாமி

அண்ணாமலையின் அதிரடியான சில நடவடிக்கைகளால் பாஜகவில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் காயத்ரி ரகுராமை அடுத்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவராக இருந்த நிர்மல் குமார் வெளியேறினார். அவர் வெளியேறியதுமே நேராக சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் இணைந்து விட்டார். இதை அடுத்து பாஜகவின் செயலாளர் விலகி அதிமுகவில் இணைந்து விட்டார். அடுத்தடுத்த இந்த அதிரடிகளால் அதிர்ந்து போய் இருக்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவரின் உருவ பொம்மைகளை, படங்களை எரித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவில் இருந்து யாரையும் அழைக்கவில்லை . பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அதிமுகவில் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர்களை மட்டுமே அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனாலும் பாஜகவில் இருந்து வெளியேறியர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதால் அவர் மீது ஆத்திரத்தை காட்டி அவரது உருவ பொம்மைகளை பாஜகவினர் எரித்து வருகின்றனர். பதிலுக்கு அண்ணாமலையின் உருவ பொம்மை, புகைப்படங்களை அதிமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

"எங்கள் தொண்டர்களை பாஜக இழுக்கும்போது இனிக்கிறது. ஆனால் அவரது கட்சிக்காரர்கள் எங்களிடம் வரும்போது கசக்கிறதா? என்று கோவை சத்யன்கூறினார். கடந்த காலங்களில், இப்போது சட்டசபையில் கட்சியின் தலைவராக இருக்கும் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களை பாஜக தன் கட்சிக்கு இழுத்தது .

அதிமுகவுக்கும் பாஜகவுமான இந்த மோதலை பார்க்கும்போது இந்த கூட்டணி இப்போதே முறிந்துவிடும். நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தாங்காது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். சொந்த கட்சியினரை போலவே கூட்டணி கட்சியினரையும் கொஞ்சம் பார்த்து பேசுவதில்லை அண்ணாமலை. இதனால் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? அப்படி தொடர்வதாக இருந்தால் பாஜகவுடனான இந்த சிக்கலில் எந்த நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் வெறும் நான்கு எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜக, பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் தன்னை முக்கிய எதிர்க்கட்சியாகக் காட்டிக் கொண்டதில் இருந்து பிரச்சனை தொடங்கியது.

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட அதிமுக மூன்று தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. எடப்பாடி. இந்நிலையில் உயர் மட்டத்தலைவர்களின் கூட்டத்தில் எடப்பாடி இந்த ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

அதிமுக தமிழ் மகன் உசேன், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன் , சி. வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து முடிவுகள் எடுப்பதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறார்

Updated On: 11 March 2023 4:47 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...