/* */

தங்க நகைகள் அதிகமாக சேர வேண்டுமா? - இந்த எளிய பரிகாரம் செஞ்சு பாருங்க!

Remedies to increase gold jewelry- தங்க நகைகள் அதிகம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த ஒரு பொருளை வைத்து எளிய பரிகாரம் செய்தால் போதும் என்று கூறப்படுகிறது.

HIGHLIGHTS

தங்க நகைகள் அதிகமாக சேர வேண்டுமா? - இந்த  எளிய பரிகாரம் செஞ்சு பாருங்க!
X

Remedies to increase gold jewelry- தங்க நகைகள்  அதிகமாக சேரணுமா? (கோப்பு படம்)

Remedies to increase gold jewelry- தங்க நகைகள் அதிகம் சேர வேண்டுமா? இந்த ஒரு பொருளை வைத்து எளிய பரிகாரம் செய்தால் போதும்..

இந்த உலகில் யாருக்கு தான் தங்கம் என்றால் பிடிக்காது. தங்க நகைகளை அதிகம் வாங்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது. ஆனால் இந்த ஆசை சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. ஆம். எல்லோராலும் தங்கத்தை சேமித்து வைக்க முடியாது. என்ன தான் தங்கம் வாங்க வேண்டும் என்று பணம் சேமித்தாலும்,, அந்த பணம் செலவாகிவிடும். இன்னும் சிலரால் தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் இருக்கும். ஒரு சிலரின் வீட்டில் நகை தங்கவே தங்காது. அடகு கடையில் தான் இருக்கும். ஆனால் தங்கத்தை எளிமையாக சேர்க்க ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் யார் வேண்டுமானாலும் தங்கத்தை சேமித்து வைக்கலாம்.


வெள்ளிக்கிழமை மகாலக்ஷ்மி தாயாருக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினம் இந்த பரிகாரத்தை தொடங்கலாம். இல்லை எனில் பௌர்ணமி என்று இந்த பரிகாரத்தை தொடங்கலாம். ஆவாரம் பூ இருந்தால் மட்டும் போது, இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வீட்டிற்கு அருகே ஆவாரம் பூ கிடைத்தால் அதை எடுத்து கொள்ளுங்கள். இல்லை எனில் நாட்டு மருந்து கடைகளில் ஆவாரம் காய்ந்ததாக இருக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். வியாழன் இரவே ஆவாரம் பூவை வாங்கி பூஜை அறையில் வைத்துவிட வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து, பூஜையறையில் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு, தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பின்னர் சில்வர் இல்லாத வேறு பாத்திரத்தில் வேண்டுமானாலும் ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் ஆவாரம் பூவை முழுவதும் நிரம்பும்படி கொட்ட வேண்டும். அதில் ஒரே ஒரு சிறிய குண்டு மணி தங்கத்தை போட வேண்டும். இந்த கிண்ணத்தை பூஜை அறை அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடம் என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆவாரம் பூவுக்கு, தங்கத்தையும் சொர்ண் தேவதையையும் வசியப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே ஆவாரம் பூவுடன் நீங்கள் தங்கத்தை சேர்த்து வைக்கும் போது அது இருக்கும் இடத்தில் சொர்ண் ஆகாசனம் அதிகமாக இருக்கும்.


இப்படி வைக்கும் போது, தங்கம் அதிகளவு சேர்வதுடன், அடமானத்தில் இருக்கும் நகைகளையும் விரைவில் மீட்டுவிடலாம். காய்ந்த ஆவாரம் பூக்களை வைத்திருந்தால், அதை வாரம் ஒருமுறை மாற்ற வேண்டும். ஆவாரம் பூ போட்டு வைத்திருந்தால், வாடியவுடன் அதை மாற்ற வேண்டும். வாடிய பூக்களை அதில் வைக்க கூடாது. இந்த பரிகாரம் செய்தால் தங்கம் வாங்கி குவிக்கும் யோகம் கிடைக்கும்.

Updated On: 29 March 2024 6:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை