/* */

வவ்வாலா, வாவலா? பெயரில என்ன இருக்கு? டேஸ்ட் தான் முக்கியம்

Vaval Fish Benefits-வாவல்களில் 20 முதல் 35 வகைகள் இருந்தாலும், வாவல் என்றதும் நம் நினைவுவில் உடனே நீந்திவருவது வெள்ளை வாவலும்,. கருவாவலும்தான்

HIGHLIGHTS

Vaval Fish Benefits
X

Vaval Fish Benefits

Vaval Fish Benefits

வவ்வால் (Pomfret), பேர்சிஃபார்மஸ் வகையை சேர்ந்த ஒரு மீன் ஆகும். இவை அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இக் குடும்பத்தின் மிகப்பெரிய இனமான பிராமா பிராமா இன மீன்கள் ஒரு மீட்டர் நீளம் வரை வளர்கின்றன.

இன்று நாம் வவ்வால் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

வவ்வால் மீன் பெர்சிஃபார்ம் எனப்படும் மீன்களின் பிராமிடே குடும்பத்தை சேர்ந்தது. இந்த வவ்வால் மீன் குடும்பத்தில் சுமார் 20 வகையான மீன்கள் உள்ளன. இந்த வவ்வால் மீன்களை ஆங்கிலத்தில் பாம்ஃப்ரெட் (Pomfret) என்று கூறுகின்றனர். இந்த மீன்களை தமிழில் வவ்வால் மீன் அல்லது வாவல் மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வவ்வால் மீன்கள் நீரில் இருக்கும் போது வெள்ளை நிறமாகவும் வலையில் பிடித்தவுடன் கருப்பு நிறமாகவும் இருக்கும். நம் இந்திய நீர்நிலைகளில் 3 வகையான வவ்வால் மீன்கள் காணப்படுகின்றன.

வாவல்களில் 20 முதல் 35 வகைகள் இருந்தாலும், வாவல் என்றதும் நம் நினைவுவில் உடனே நீந்திவருவது வெள்ளை வாவலும்,. கருவாவலும்தான்

வெள்ளை வாவல், ஒரே எலும்புடன், வெள்ளை சதையுடன் கூடிய, நெய்யற்ற மீன் சுவையான மீன். அதுபோல, மற்றொரு ரகமான கருவாவல் மீன், வெள்ளை வாவலுடன் ஒப்பிடும்போது அவ்வளவு சுவையானது அல்ல. விலையும் உயர்ந்ததும் அல்ல. எனினும், கருவாவலாக இருந்தாலும் வாவல் வாவல்தான்.

வாவல் வகையறாவில் மிக உயர்ரக மீனாகக் கருதப்படுவது ஐய்வாவல். (China Silver Pomfret). சென்னையில் இதன் பெயர் மோவான் அல்லது மொகான்.

இந்த சீன வெள்ளி வாவலான ஐய் வாவல், வெள்ளை வாவலை விட சற்று பெரியது. அகலமானது. மற்ற வாவல்களை விட அதிக சதைப்பற்றுள்ளது. சமமான, ஒரே அளவிலான தாடைகளைக் கொண்டது. வெள்ளிநிற உடலில் லேசான கருநிறசாம்பல் நிறம் கொண்டது.

வாவல்களில் அதிக விலை போகும் மீன் ஐய் வாவல்மீன்தான். வாவல்களில் இன்னும் மூக்கரை வாவல், சிரட்டை வாவல், அழுக்கு வாவல் வகைகளும் உள்ளன.

இதில் குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. அதிக சுவை மட்டுமின்றி ஏராளமான அளவில் ஒமேகா 2 ஆசிட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.

வவ்வால் மீன் உண்பதால் கிடைக்கும் பயன்கள்:

வவ்வால் மீன் சாப்பிடுவதால்வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு மிதமான அளவில் மீன்களை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வவ்வால் மீன்களில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் B12 வைட்டமின்கள் அதிகம் உள்ளன. பொதுவாக வவ்வால் மீன் இறைச்சியில் புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்கும். ஆனால், இந்த மீனில் துத்தநாகம், பாஸ்பரஸ், சோடியம், செலினியம், கால்சியம் போன்ற தேவையான தாதுக்கள் உள்ளன. இது இதயம், மூளை, தசை போன்றவற்றுடன் தொடர்புடைய பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

வவ்வால் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

இதில் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய செயல்திறனை அதிகரிக்கிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது. இரத்த அழுத்தத்தையும் குறைகிறது.

இந்த மீன் சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது. இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் இது எடை இழப்பு போன்றவற்றிற்கு சிறந்த உணவாகும்.

இந்த மீன் சாப்பிடுவதால் ஆரோக்கியமாகவும் அதிக நோய்எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகவும் இருக்க முடியும்.

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது வளர்ச்சிதை மாற்ற செயல்முறையை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமன்றி நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

இது ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.

குழந்தைகள் இந்த மீனை சாப்பிடுவதால் அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது.

பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கிறது.

இதில் கொழுப்பு அமிலமான ஒமேகா 3 ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் இது மூளை செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் நரம்புகளின் வீக்கத்தை குறைக்கிறது.

இது மார்பக புற்றுநோய் வரும் அபாயத்தை தடுக்கிறது. காரணம், இந்த மீன் உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுக்கும் திறன் கொண்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 March 2024 5:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி