/* */

உருவம் சிறியது! பயனோ பெரியது!! கடுகின் மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோம்

நாம் பயன்படுத்தும் கடுகில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

உருவம் சிறியது! பயனோ பெரியது!! கடுகின் மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோம்
X

கடுகு. (மாதிரி படம்).

நமது உணவுப் பொருளில் மிளகைப் போன்றே பன்நெடுங்காலமாக கடுகும் சமையலில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றே கூறலாம். கடுகு பற்றிய மருத்துவக் குறிப்புகள் அதர்வனவேதத்தில் கூட உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கடுகு குறித்தும், கடுகில் உள்ள சத்துக்கள், அதன் மருத்துவக் குணங்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு இதோ:



கருங்கடுகு, வெண்கடுகு, சிறுகடுகு, மலைக்கடுகு மற்றும் காட்டுக்கடுகு என்று கடுகில் பல வகை உண்டு. கடுகுக்கு என்று தனி சுவை கிடையாது. அது தண்ணீருடனோ அல்லது சூடான எண்ணெயிலோ சேர்த்த பின்னர், அதிலிருந்து ஒரு நொதியம் வெளிப்பட்டு, ஒரு காரச்சுவையைத் தருகின்றது.

கடுகில், கடுகற்ற பொருள் 2 சதவீதத்கிற்கும் மிகாமலும், உடைந்த கடுகு அல்லது சுருங்கிய கடுகு 2 சதவீதத்திற்கும் மிகாமலும், ஆவியாகாத ஈதர் (Non-Volatile Ether) 28 சதவீதத்திற்கும் ‘குறைவில்லாமலும்’ இருக்க வேண்டும், பூஞ்சையோ, பூச்சிகளோ (இறந்த அல்லது உயிருள்ள) இருக்கக் கூடாது என்று FSSAI தரம் நிர்ணயித்து உள்ளது.

கடுகில் அல்லைல்-ஐசோதயோசையனேட் என்ற ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட் தாவரத்தின் வகைக்கு ஏற்றவாறு 0.7 - 1 சதவீதத்திற்குக் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்றும் FSSAI வரையறுத்துள்ளது. கடுகில் பிரம்மத்தண்டு விதைகள் (Argemone Seeds) கலப்படம் இருத்தல் கூடாது என்றும் FSSAI வரையறுத்துள்ளது.


கடுகில், செயற்கை வண்ணமோ அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருளின் கலப்படமோ இருத்தல் கூடாது என்றும் FSSAI வரையறுத்துள்ளது. அரைத்த கடுகுப் பொடியில், நார்ச்சத்து 8 சதவீதத்திற்கு மிகாமலும், ஸ்டார்ச் 2.5 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

ஈரப்பதம் இல்லாத, சற்று குளிர்ந்த உலர்வான இடத்தில் அறைவெப்பநிலையிலேயே கடுகை மாதக் கணக்கில் வைத்து இருக்கலாம். காற்றுப்புகா உணவுத் தரக் கொள்கலனில், குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் இரண்டு வருடங்கள் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.

நூறு கிராம் கடுகில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

நூறு கிராம் கடுகில் எரிசக்தி: 469 Kcal (தினசரி தேவையில் 23 சதவீதம்), கார்போஹட்ரேட்: 34.9 கிராம் (தினசரி தேவையில் 12 சதவீதம்), கார்போஹைட்ரேட்டில் நார்ச்சத்து: 14.7 கிராம் (தினசரி தேவையில் 59 சதவீதம்), மொத்த கொழுப்பு: 28.8 கிராம் (தினசரி தேவையில் 44 சதவீதம்). அதில், நிறைவுற்ற கொழுப்பு 1.5 கிராம் (தினசரி தேவையில் 7 சதவீதம்). மோனோ-அன்சேச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் 19.8 கிராம் மற்றும் பாலி-அன்சேச்சுரேட்டட் அமிலம் 5.4 கிராம் உள்ளது.


புரதம் 24.9 கிராம் (தினசரி தேவையில் 50 சதவீதம்), வைட்டமின் நியாசின் 7.9 மிகி (தினசரி தேவையில் 39 சதவீதம்), வைட்டமின் தயமின் 0.5 மிகி (தினசரி தேவையில் 36 சதவீதம்), இரும்புச்சத்து 10 மிகி (தினசரி தேவையில் 55 சதவீதம்), மாங்கனீஸ் 1.8 மிகி (தினசரி தேவையில் 88 சதவீதம்), மெக்னீசியம் 298 மிகி (தினசரி தேவையில் 55 சதவீதம்), செலினியம் 134 மைகி (தினசரி தேவையில் 191 சதவீதம்) உள்ளன.

கடுகின் மருத்துவக் குணங்கள்:

கடுகில் உள்ள ஐசோ-தயோசையனேட் என்ற ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட் மார்பக, நுரையீரல், செரிமான மண்டலம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய்கள் உருவாகும் வாய்ப்பினைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடுகு உடல் வலிக்கும், தசைப் பிடிப்பிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.


தலை முடி வளர்வதற்கும் கடுகு பயன்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடுகு நமது உடலில் கெட்ட கொழுப்பினைக் (LDL) குறைக்கவும், நீரிழிவு நோய் பாதிப்பினை குறைக்கவும் பயன்படுகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கடுகினை நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச அளவு “1-2 தேக்கரண்டி” என்பதாகும்.

பொதுவாக, கடுகு பாதுகாப்பான உணவு என்று பல்வேறு உணவு பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன. அதேவேளையில், ஆர்வக் கோளாறினால், அதிகபட்ச அளவில் கடுகை சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல், இதய செயல்பாடு குறைவு போன்ற நலக் குறைபாடுகள் நமக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 March 2023 4:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!