/* */

வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் ஊக்க வரிகள் .,..அழகான தமிழில் ...இதோ

Life Motivational Quotes in Tamil-வாழ நினைத்தால் வாழலாம்...வழியா இல்லை பூமியில் என்ற சினிமா பாடலை அனைவருமே கேட்டிருப்பீர்கள். எனவே வாழ்க்கை வாழ வழிகள் நிறைய இருக்கின்றன. அதனை நாம்தான் தேர்வு செய்யவேண்டும்.

HIGHLIGHTS

வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும்  ஊக்க வரிகள் .,..அழகான தமிழில் ...இதோ
X

Life Motivational Quotes in Tamil

வாழ்க்கை என்பது சாதாரணமானது அல்ல. எப்படி ரோடானது மேடு , பள்ளம் உள்ளதோ அதுபோல்தான் வாழ்க்கையும். ஒரே மாதிரியான ரோடுகள் இல்லாததைப்போல்தான். வாழ்க்கை என்பது ஒரே சந்தோஷமாகவே வாழ்ந்துவிட முடியாது. யாராலும் முடியாதுங்க...

வாழ்க்கையில் எப்போதாவது ஒரு முறையாவது துன்பத்தை நாம் நேருக்கு நேர் சந்தித்தேஆக வேண்டும்.அது வாழ்ந்து பார்த்தவர்களுக்கு தெரியும். ஏங்க.. நீங்க என்ன சொல்றீங்க...எனக்கு துன்பமே வந்தது இல்லைங்க... என யாராவது ஒரு ஆளை விரல் விட்டு எண்ணிவிட முடியுமா? நிச்சயமாக முடியாது.

மாடிவீட்டில் வசிப்பவர்கள் முதல் ஏழை வரை அனைவருமே இன்பம் ,துன்பங்களை சந்தித்துதான் வாழ்ந்து வருகின்றனர்.என்ன? அவரவர்களின் வசதி வாழ்க்கைக்கேற்ப இன்பங்களும், துன்பங்களும் சற்று வித்தியாசப்படும்.. அவ்வளவே...

ஒன்று மட்டும் சொல்கிறேன்... துன்பம் என்பது நடுத்தரகுடும்பங்களுக்கு கூட கொஞ்சமாக தான் வரும். ஆனால் வசதி இருப்பவர்களுக்கு வந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது.இது அனுபவத்தில் கண்ட உண்மை. ஏனெனில் அவர்களால் யாரிடமும் வெளியில் சொல்ல முடியாது. கவுரவ பிரச்னை.

அதுபோல் வாழ்க்கை என்பது சாதாரணமானது அல்ல. நாம் வாழும் ஒவ்வொரு நாளுமே நமக்கு அனுபவங்கள்தான். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். அவை அனைத்துமே நமக்கு பாடங்கள். நம் தலைமுறையினருக்கு சொல்ல இது நமக்கு கிடைத்த அனுபவம். எனவே வாழ்க்கையில் பிரச்னைகளைக் கண்டு மலைத்துபோய் விடக்கூடாது. போராடும் குணம் வேண்டும். இது இல்லாதவர்கள் வாழத்தகுதியற்றவர்கள். பிரச்னைகள் வந்தால் மூலையில் சோர்ந்து போய்விடக்கூடாது. எதிர்த்து போராடி வெற்றி பெறுவதற்கான வழி முறைகளை ஆராயவேண்டும்.

அந்த வகையில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஊக்க வரிகள் அழகு தமிழில் இதோ படியுங்களேன்....

இந்த இரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் உதவாது: 1. தாழ்வு மனப்பான்மை 2. தலைக்கனம். மற்றவரோடு நாம் ஒப்பிடும் போது இவை நமக்கு வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தும்!

வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி! எல்லாரும் பார்ப்பது, நம் ஸ்டேட்டஸ் தான்!

மனதுக்குள் என்ன நினைக்கிறோமோ அதுதான் செயலில் வெளிப்படும். நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்!

உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு! உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது!!

தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி..!!

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.

நாம் எதை அதிகம் விரும்புகிறமோ அதற்கு நம்மை பிடிக்காமல் போகும்! இல்லையெனில், போக போக நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும்....

கஷ்டமோ நஷ்டமோ மனசுக்கு புடிச்சவுங்க கூட வாழ்ந்தது மட்டும் தான் வாழ்க்கையே சந்தோஷமா இருக்கும்...

போலிக்கு தான் பரிசும் பாராட்டும்.. உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே... - சார்லி சாப்லின்

உழைப்பு உடலை பலப்படுத்தும், கஷ்டங்கள் மனதை பலப்படுத்தும்..

உழைத்து வாழ்வது தான் சுகம்.. வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்...!

போதும் என்ற மனம் படைத்திருப்பதே பெருஞ்செல்வம்.

நீ விழி மூடி இருந்தாலும், கதிரவன் கதிர் எழுப்பாது நில்லாது! நீ ஓரம் நின்றாலும் உன் பிரச்சனை உன்னை விட்டு விலகாது! எதுவானாலும் எதிர்த்து நில் துணிவிருந்தால் மட்டும்!

அரைநொடி நிகழ்வை கூட ஆயுள் வரை, அசைபோடுவது தான் வாழ்க்கை!

காயங்களை குருதட்சணையாக வாங்கிக்கொள்ளாமல், காலம் யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை...

நிறம் மாறும் பச்சோந்திகளை விட, அடிக்கடி தன் நிலைப்பாட்டிலிருந்து மனம் மாறும் மனிதர்களிடமே அதிக கவனம் தேவை!

தேவைகள் இருக்கும் வரை தேடப்படுவாய்! தேவைகள் உன்னிடம் நடக்காது என்றால்! பல அடி உயரங்களில் இருந்து பாரபட்சமின்றி தூக்கி வீசப்படுவாய்!

விதி வரைந்த பாதையில், விடை தெரியாத விண்மீன்களாக விரைந்து செல்லும் வாழ்க்கைப் பயணம்!

மறைக்க நினைக்கும் மனிதர்களிடம் மறந்தும் மயங்கிவிடாதீர்கள்!

முயற்சியே, இலட்சியத்தோடு இலக்கு தொடு! பயணத்தின் இறுதிவரை கூடு துறந்து விடாத நத்தையைப் போல!

உன் தேடல்களின் வலியே, உன் பயணங்களின் விழி! தோல்வி அறிந்து, வாழ்வை அறிந்து, தொடர்ந்து பயணி! வலியில், தேடலை மட்டும் ஒருபோதும் விட்டு விடாதே!

முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்!

எனவே வாழ்ந்தவர்களும், வாழப்போகிறவர்களுக்கும் சொல்வது ஒன்னே ஒன்னுதான் நமக்கு தேவை நம்பிக்கை தாங்க... நம் கையில் உள்ள அனைத்தையும் இழந்துவிட்டாலும் நம்மிடம் தன்னம்பிக்கை மட்டும் தாராளமாக இருந்தால் ஜெயித்துவிடலாமுங்க... எனவே தன்னம்பிக்கையினை எந்த நேரத்திலும் இழக்காமல் வாழக்கற்றுக்கொள்ளுங்கள்... வாழ்க்கை உங்கள் வசமாகும்...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 11:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்