loneliness quotes in tamil-தனிமை, ஒரு வரம் சிந்தனைக்கு..! ஒரு சாபம், உறவுக்கு..!

loneliness quotes in tamil-மனிதனுக்கு காலம் கொடுக்கும் ஒரே வரப்பிரசாதம் அடுத்த நொடி. ஒவ்வொரு நொடியும் நமக்கானதே என்றால் அதை பயன்படுத்த தெரியாதவன், தோல்வியை தழுவுகிறான்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
loneliness quotes in tamil-தனிமை, ஒரு வரம் சிந்தனைக்கு..! ஒரு சாபம், உறவுக்கு..!
X

loneliness quotes in tamil-தனிமை மேற்கோள்கள்.(கோப்பு படம்)

loneliness quotes in tamil-தோல்விகளால் எழும் வலியில் பலர் தனிமையை நாடுகின்றனர். அந்த தனிமை சிந்திக்கவும் கற்றுத்தரும் ஒரு போதி மரம். ஆமாம், தனிமை என்பது ஒரு போதிமரம். நல்லதையும் தீயவைகளையும் அலசி ஆராயும் பரிசோதனைக்கூடம். தனிமையை இனிமை ஆக்கிக்கொள்வது மனதைப் பொறுத்த மாற்றம். தோல்விகள் ஏன் வந்தது என்று சிந்தனை செய்தால் அது நேர்மறை. இந்த தோல்வியால் நான் எல்லாம் இழந்துவிட்டேன் என்று நினைத்தால் அது எதிர்மறை. அதை மாற்றுவது மனசு என்னும் மாவீரன், அல்லது கோழை. எது என்று நீங்களே தீர்மானியுங்கள். தனிமை என்னதான் சொல்லுது..படீங்க..

 • வாழ்க்கையில் நான் நினைத்தது எதுவும் எனக்கு கிடைக்காமல் போகும் போதெல்லாம் எனக்கு ஆதரவாய் வந்து என்னிடம் ஆறுதல் கூறுகிறது இந்த "தனிமை".
 • தனிமையை காதலிக்க தனித்து அமர்ந்திருந்தேன். உன் தீரா நினவலைகள் என் நெஞ்சை தீயாய் எரிக்குதடி... காயப்பட்டு நான் துடித்தேன் கட்டியணைக்க யாருமில்லை.
 • திகட்டத் திகட்ட பேரன்பை கொடுப்பவர்களால் மட்டுமே, அதற்கு போட்டிப் போட்டு ஈடுகொடுக்கும் தனிமையும் வெறுமையும் தந்துவிட்டு செல்ல முடியும்..

loneliness quotes in tamil

 • இயற்கையின் மறுவடிவமே, தனிமை. இயற்கையை ரசிக்காத மனிதனும் இல்லை, தனிமையில் வாழாத மனிதனும் இல்லை..
 • என் இனிய தனிமையே, என்னுடன் நீயாவது துணைபுரிவாயா?
 • உன்னைக் காதலித்தேன், தனிமை கஷ்டமாக இருந்தது. இப்போ, தனிமையை காதலிக்கிறேன் உன்னை வெறுத்து..
 • நிஜங்கள் எல்லாம் நிழல்களாகிப் போனதும், வாழ்வில் இன்று தனிமை மட்டும் காதல் செய்கிறது என்னை..

loneliness quotes in tamil

 • தனிமரமாய் நடக்கத் தொடங்கினேன். பாதையும் நீள்கிறது, பயணமும் தொடர்கிறது நினைவுகளோடு..
 • தனிமை என்பதே இல்லை என் வாழ்வில், நீங்காத உன் நினைவு என் நெஞ்சோடு இருக்கும் வரை..
 • என்னை தனிமையிடம் விற்று, பதிலுக்கு நீ எதை வாங்கினாயோ..?
 • ஒளி வந்தால் நிழல் கூட விலகிவிடும். உலகில் தனிமையே நிலையானது. ஒளியை நம்பும் நீ இருளாக வாழாதே..

loneliness quotes in tamil

 • நீயற்ற கணங்கள் அனைத்தும், என் அர்த்தமற்ற பொழுதுகளே..
 • பல கேள்விகள் கேட்டு ஒரு பதில் வருவதும் ஒருவகை நிராகரிப்பு தான்..
 • அதிகம் பேர் அருகில் இருந்தாலும், அதில் நீ இல்லை என்றால் அது தனிமையே..
 • நீ இருந்த வரை ஆனந்தத்தோடு உறக்கம். நீ விட்டுபோன பின்பு அழுகையோடு உறக்கம்..

loneliness quotes in tamil

 • யாருடைய மாற்றமும் உன்னை பலவீனமாக்கக் கூடாது..
 • அன்று நீ பேசினாய் மணிக் கணக்காய்..இன்று உன் மெளனம் பேசுகிறது, நாள் கணக்காய்..
 • விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில், அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு.
 • நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது, இந்த வாழ்க்கை..

loneliness quotes in tamil

 • மனிதன் செய்யும் முதல் தவறு பிறப்பது.. கடைசி தவறு இறப்பது இடையில் செய்யும் பெரிய தவறு திருமணம் செய்வது.. மாபெரும் தவறு காதலிப்பது..
 • நிம்மதியை இழந்து தனிமையை சந்தித்தேன். தனிமை சிரித்தது இது தான் வாழ்க்கை என்று. இது தான் அனுபவம் என்று..
 • தொலைந்தே போனேன், பல நாளாய் என்னைத் தேடுவதற்கு யாரும் இன்றி..!

loneliness quotes in tamil

 • உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் தனிமை என்னைக் கொல்கிறது. என் தனிமையை உன் மனம் அறியுமோ?
 • அன்பினால் வரும் மிகப்பெரிய வலி, நம்மோடு இல்லாத ஒருவரை நேசிப்பது.
 • என்னைச் சுற்றியுள்ளவர்கள்அவர்களின் உண்மையான முகங்களைக் காட்டத் தொடங்கியபோது நான் தனிமையில் இருப்பதை ரசித்தேன்.
 • அழகைக் காணும் ஆன்மா சில நேரங்களில் தனியாகவும் நடக்கலாம்.

loneliness quotes in tamil

 • என்னுள் நான் தனியாக வாழும் ஒரு இடம் இருக்கிறது, அங்குதான் வற்றாத நீரூற்றுகளை நீ புதுப்பிக்கிறாய்.
 • தனிமைக்கு முக்கிய காரணம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நமது நம்பிக்கையை உடைப்பது.
 • தனிமை.. நாமாக எடுத்துக்கொள்ளும் போது இனிக்கும். பிறர் நமக்கு கொடுக்கும்போது வலிக்கும்.
 • சில நேரங்களில் தனியாக இருப்பது நல்லது.. நம்மை யாரும் காயப்படுத்த முடியாது.
 • போலியான நபர்களைச் சமாளிக்கும் வலிமையை இழக்கும்போது, நாம் தனிமையாகி விடுகிறோம்.

loneliness quotes in tamil

 • அர்த்தமற்ற வார்த்தைகளை விட அர்த்தமுள்ள மௌனம் எப்போதும் சிறந்தது.
 • நினைவுகளின் வலி அல்ல, தனிமையின் வலி.
 • தவறான உறவுகளின் முடிவுதான் தனிமை.
 • சிலர் நம் வாழ்க்கையில் வருவது, தனியாக எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு கற்ப்பிக்க மட்டுமே.
 • நாம் விரும்பும் ஒருவரின் ஒற்றை அரவணைப்பு, தனிமை என்னும் உணர்வை முற்றிலும் உடைத்துவிடும்.

loneliness quotes in tamil

 • ஏன் என்னோடு நகற்கிறாய் என்று என் நிழலைக் கேட்டேன். அது சிரித்துகொண்டே என்னை தவிர வேறு எவரும் உன்னோடு கடைசிவரை வருவதில்லை என்றது.
 • சந்திப்பு என்று வரும் போது "மகிழ்ச்சி"பிரதானமாகிறது. பிரிவு என்று வரும் போது "குறைகள்" பிரதானமாகிறது, இருந்தும் இல்லை என்று ஆன போது "தனிமை" பிரதானமாகிறது.
 • என் மீது கோபம் கொண்டு நாள் முழுவதும் பேசாமல் இருப்பாய் அந்த நேரத்தில் நான் துடித்து போவேன்

நீ பேசாமல் இருப்பதற்காக அல்ல. என்னிடம் பேச துடிக்கும் உன் இதயத்தை எண்ணி..

loneliness quotes in tamil

 • தேடிப் போய் பேசுனா "பொய்" என்றும் விட்டு கொடுத்துப் பேசுனா "பொய்" என்றும் வெறுக்கும் இடத்தில அன்பு காட்டினால் "பொய்" என்றும் இனிக்க இனிக்க நடித்து பேசுவதை தான். "உண்மை" என்றும் நம்புகிறது, இந்த உலகம்.
 • என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று நீ கவலைப்படுவதற்கு, நீ சந்தையில் விற்கும் பொம்மை இல்லை,
 • உன்னைப் பிடித்து,உன்னை வாங்குவதற்கு, உன்னை உனக்கு பிடித்தால் போதும். நீ....என்பது நீயே...!
 • வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான். தூரத்தில் இருந்து பார்த்தால் அழகாக ஒளி மட்டும் தெரியும் அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும், அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது.
Updated On: 23 Sep 2022 8:27 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 2. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 3. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 4. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
 6. நாமக்கல்
  காந்தி பிறந்த நாளில் கதர் துணிகளை வாங்கிய நாமக்கல் பா.ஜ.க.வினர்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழா
 8. நாமக்கல்
  நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
 9. நாமக்கல்
  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மரவள்ளி சாகுபடி விழிப்புணர்வு...
 10. நாமக்கல்
  ராசிபுரம் தேசிய வேளாண்மை அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்ற...