/* */

expectation hurts quotes-எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது மனது காயமடைகிறது..!

expectation hurts quotes-எதிர்பார்ப்புகள் என்பதை நாம் தேவை, இலக்கு என்ற அடிப்படையிலான இரு வகைகளில் பொருள் கொள்ளலாம்.

HIGHLIGHTS

expectation hurts quotes-எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது மனது காயமடைகிறது..!
X

expectation hurts quotes-காயப்படுத்தும் மேற்கோள்கள்.(கோப்பு படம்)

expectation hurts quotes-எதிர்பார்ப்புகள் என்பதை நாம் இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று தேவையின் அடிப்படையிலானது. ஒருவருக்கு அடிப்படையில் தேவைப்பட்ட உணவோ, பொருளோ கிடைக்காதபோது அது கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது. இது ஏழ்மையின் பிடியில் இருப்போருக்கான தேவை. மற்றொன்று லட்சியப் பாதையில் வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இதை கனவு என்று கூட சொல்லலாம். ஆனாலும் அதுவும் ஒரு எதிர்பார்ப்பே. அதை அடைய முற்படுவது, அதை நோக்கி செயல்படுவது. இந்த கனவு காணுதலைத்தான் நமது மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயா கூறியுள்ளார். இப்படியான எதிர்பார்ப்புகளை கருத்தாக கொண்ட மேற்கோள்களை இங்கு உங்களுக்காக தந்துள்ளோம்.. படீங்க.


  • நீங்கள் எதைத் தேடினாலும் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் கிடைத்துவிடாது - ஹருகி முரகாமி
  • யார் ஒருவர் எதையும் எதிர்பார்க்காமல் வாழ்கிறாரோ அவர் வாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்று வருத்தப்படமாட்டார்; ஏமாற்றமும் அடைய மாட்டார்.
  • நமது எதிர்பார்ப்புகளின் தரம் நமது செயலின் தரத்தை தீர்மானிக்கிறது.
  • வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லையெனில், ஏமாற்றமும் இருக்கப்போவதில்லை.

expectation hurts quotes

  • நீங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய முடியாது - டோனியா ஹர்லி
  • எதிர்பார்ப்பு என்பது செயல் வடிவம் கொடுக்காதவரை..உங்களின் வெறும் கற்பனை மட்டுமே..!
  • நாம் எதிர்பார்ப்பதைக் கொடுக்கவேண்டும் என்ற எந்தக் கடமையிலும் வாழ்க்கை இல்லை - மார்கரெட் மிட்செல்
  • எனது ஆசைகள் நிறைவேறும் வரை காத்திருக்க எனக்கு போதுமான பொறுமை இருக்கிறது - லைலா கிஃப்டி அகிதா
  • வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் முடிந்தவுடன் அமைதியும் தொடங்கிவிடுகிறது.. - ஸ்ரீ சின்மோய்

expectation hurts quotes

  • எதையும் எதிர்பார்க்காதவன் பாக்கியவான், ஏனென்றால் அவன் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டான்.
  • நீங்கள் காயப்பட்டுவிட்டீர்கள் என்பதற்காக மற்றவர்களைக் குறை கூறாதீர்கள், உங்களைப் புண்படுத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளித்தது உங்கள் தவறு.
  • மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது கிடைக்காதபோது நாம் மன வருத்தமடையலாம். அதை ஒருபோது செய்யாதீர்கள். அது உங்களை மிகவும் காயப்படுத்தும்.
  • நான் முடிவுகளை எதிர்பார்க்கவில்லை. நான் எனது வேலைகளை திறம்பட செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன். முடிவுகள் தானாகவே எனக்கு சாதகமாக வரும்.
  • சில நேரங்களில் நாம் நம்மையே வெறுக்கிறோம், நமக்குத் தகுதியில்லாத மற்றவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பதால்.

expectation hurts quotes

  • நாம் மற்றவர்களிடம் அதிகமாக எதிர்பார்த்தால், அதற்காக ஏமாற்றம் அடையலாம். அதனால், மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதே ஏமாற்றம் அடையாத ஒரு நிலையை உணருவீர்கள்.
  • அதிகமான எதிர்பார்ப்புகளும் இல்லை, அதனால் வலிகளும் இல்லை, கவலைகளும் இல்லை. வாழ்க்கையில் புன்னகை மட்டுமே. ஏமாற்றமின்றி வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.
  • நம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் உண்மையை மட்டுமே கூறும் ஒரே நபர் நமது தாயிடம் மட்டுமே.
  • நாம் அதிகமாக எதிர்பார்த்து அவையெல்லாம் நமக்கு கிடைக்கவில்லையெனில் நாம் வருத்தமாக உணர்கிறோம். எனவே, ஒருபோதும் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். உங்களிடம் உள்ளதைக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கவும்.

expectation hurts quotes

  • யாரிடமாவது எதையாவது எதிர்பார்த்து வாழ்வது பயனற்ற வாழ்க்கையாகவே இருக்கும்..!
  • எப்பொழுதும் யாரிடமும் குறைவாகவே எதிர்பார்க்க வேண்டும். அதுவே உங்களுக்கு மன அமைதியைத் தரும்.
  • நான் உன்னை அதிகமாக நேசித்தது என் தவறு. அதிலும் எனது நேசத்தைப் போலவே நான் உன்னிடம் எதிர்பார்த்தது மிகப்பெரிய தவறு.
  • நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, நீங்கள் பார்க்கிறீர்களோ, உங்கள் எதிர்பார்ப்புகள் உங்கள் யதார்த்தத்தை உருவாக்குகின்றன. - கெல்லி கார்பெட்

expectation hurts quotes

  • வாழ்க்கை என்பது பெரும்பாலும் எதிர்பார்ப்புகள் நிறைந்ததே.. - ஹோரஸ்
  • எதிர்பார்ப்புகளால் சுமக்கப்படும் வாழ்க்கை ஒரு கனமான வாழ்க்கையாகத்தான் இருக்கும். அதன் பலன் சோகமும் ஏமாற்றமும்தான். -டக்ளஸ் ஆடம்ஸ்
  • நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் - இவான் இலிச்
  • சுயமாக கொலை செய்பவன் கொலைகாரன். ஆனால், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கொலை செய்பவன் ஒரு தேசிய வீரன்.
  • எதிர்பார்ப்புக்கு நாணய (currency) மதிப்பு மட்டுமே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது - பிராண்டன் சாண்டர்சன்

expectation hurts quotes

  • எதிர்பார்ப்புகள் அறுவடை செய்யும் வகையில் எந்த விளைவையும் ஏற்படுத்திவிடாது. - மார்டி ரூபின்
  • உயர்ந்த சாதனை எப்போதும் அதிக எதிர்பார்ப்புகளின் கட்டமைப்பில் நடைபெறுகிறது. - சார்லஸ் கெட்டரிங்
  • என்னைப் பொறுத்தவரை, எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே உத்வேகத்துடன் கூடிய வாழ்க்கையை உருவாக்குகிறது - அலனிஸ் மோரிசெட்
  • எனது எதிர்பார்ப்புகளை நீங்கள் எங்காவது சந்தித்தால், தயவுசெய்து அவர்களை வீட்டிற்கு வரச் சொல்லுங்கள்.

expectation hurts quotes

  • எதிர்பார்ப்பு என்பது எதிர்காலப் பொருள், எனக்குச் சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டது. - சாமுவேல் அலெக்சாண்டர்
  • யாரிடமும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எதுவும் இல்லாதபோது அது உங்களை காயப்படுத்துவதுடன் நீங்கள் ஏமாற்றமாக உணர்கிறீர்கள். எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்வது மிகவும் எளிதானது.
  • மற்றவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது நிறைவேறாமல் போவதால் அது நம் மனநிலையை பாதிக்கிறது. எதிர்பார்க்காமல் இருக்கலாமே..உங்களை காயப்படுத்தாமல் இருக்குமே..!
  • திருப்பிக் கொடுப்பது ஒரு எதிர்பார்ப்பு, ஒரு விருப்பம் அல்ல. - கேசி வாசர்மேன்

expectation hurts quotes

  • ஒரு மனிதனைக் கொல்கிறான், அவன் கொலையாளி ஆகிறான் ; ஆனால் ஒருவன் லட்சக்கணக்கானோரை கொன்று குவிக்கிறான். அவன் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகிறான்.
  • ஒரு குறிப்பிட்ட வழியில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். - எம்மா வாட்சன்
  • உங்களுக்கு எது சாத்தியமோ அதைவிட உங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். - கோடி மெக்லைன்
  • எதிர்பார்ப்பு ஒரு சக்திவாய்ந்த கவர்ச்சிகரமான சக்தி. நீங்கள் மக்களை இலட்சியப்படுத்த முனையும் போது, உண்மையில் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறினால் ஏமாற்றம் அடையலாம்.
Updated On: 28 Nov 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  3. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  4. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  5. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  8. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  9. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  10. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!