/* */

கசகசாவில் இத்தனை மருத்துவ நன்மைகளா?! படித்து பாருங்க

Benefits of Poppy Seeds in Tamil-கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்கள் நிறைந்த கசகசாவின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

HIGHLIGHTS

Benefits of Poppy Seeds in Tamil
X

Benefits of Poppy Seeds in Tamil

Benefits of Poppy Seeds in Tamil-இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. 'கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்' என்கிறது சித்தர் பாடல்.

காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேலைநாடுகளிலும் 'பாப்பி விதை' என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

கசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது. அதன் புல்வேர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவப் பயன்கள், சோப்புகள், நறுமண திரவியங்கள், மேலும் உணவுகள் மற்றும் பானங்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவற்ற பயன்களைக் கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தைச் சேர்க்கிறது.

எண்ணற்ற நன்மைகளை கொண்டிருக்கும் 'கசகசா'வின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்களுக்கு கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள்.

செரிமானத்திற்கு நல்லது:

கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக இருப்பதால் இது முறையான செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை முற்றிலுமாக ஒழிக்கிறது. இது உடலின் இயக்க அமைப்பை மேம்படுத்தி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயு உற்பத்தி போன்ற நோய்களிலிருந்து நிவாரணமளிக்கிறது.

கருப்பை வளத்தை மேம்படுத்துகிறது:

பெண்களுக்கு கசகசா பல வகைகளில் நன்மை சேர்க்கிறது. குறிப்பாக கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு கசகசா உதவலாம். கசகசாவின் மருத்துவ குணம் பெண்களின் கருவளத்திற்கு நன்மை பயக்கிறது. கசகசா விதைகளின் எண்ணையைப் பயன்படுத்தி கருக்குழாய் கழுவப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பெண்களில் கருவுறும் விகிதம் அதிகரிக்கிறது. இது கருக்குழாயிலுள்ள கருச் சிதைவுகள் அல்லது சளி போன்ற திரவ கசடுகளை நீக்குகிறது. இது சுமார் 40 சதவிகித பெண்களுக்கு நேர்மறையான விளைவுகளைக் காட்டியுள்ளது. மேலும், கசகசா விதைகள் உங்கள் பாலியல் விருப்பங்களை அதிகரித்து ஆண்மையையும் பாலுணர்ச்சியையும் அதிகரித்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆற்றலை அதிகரிக்க செய்கிறது:

கடினமான வேலைகளை செய்வதற்கு ஆற்றல் அளவை அதிகரிக்க நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் தேவைப்படுகிறது. கசகசா விதைகllளில் கலப்பு கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவு இருப்பதால், இது உடலில் கரையும் போது ஆற்றலை உற்பத்தி செய்கிறது. மேலும் சோர்வுக்கு வழிவகுக்கும் கால்சியம் குறைபாடு ஏற்படும் போது இது போதுமான கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது.

வாய்ப்புண்ணை குணப்படுத்துகிறது:

கசகசா விதைகளின் குளிர்ச்சியான மூலக்கூறுகள் உங்களுக்கு வாய்ப்புண்ணால் ஏற்படும் அவதிக்கு நன்மை தரக்கூடியது. கசகசாவை பொடித்த சர்க்கரை மற்றும் கொப்பரைத் தேங்காய்த் துருவலுடன் சேர்த்து சிறு உருண்டைகளாக தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது:

மூளையின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான கால்சியம், இரும்புச் சத்து மற்றும் தாமிரம் ஆகியன கசகசா விதைகளில் அடங்கியுள்ளன இந்த ஊட்டச்சத்துக்கள் நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தி மூளையின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும் இது அறிவுத்திறன் மங்கும் குறைபாட்டை குறைக்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

எலும்புகள் பலம் பெறும்

எலும்புகளின் வலிமைக்கு போதுமான கால்சியம் மற்றும் தாமிரச் சத்து தேவைப்படுகிறது. 40 வயதுக்குப் பிறகு எலும்புகள் தேயத் தொடங்குகின்றன. அப்போது மக்கள் கால்சியம் மாத்திரைகளை தேர்ந்தெடுக்கின்றனர். கசகசா விதைகள் எலும்புகளையும் அத்துடன் தொடர்புடைய திசுக்களையும் பலப்படுத்தக்கூடிய இயற்கையான மூலக்கூறு ஆகும். இதில் செறிந்துள்ள பாஸ்பரஸ் எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது. இதைத் தவிர கசகசா விதைகளில் அடங்கியுள்ள மாங்கனீசு எலும்புகளை தீவிரமான காயங்களிலிருந்து காக்கிறது.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது:

கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஓலிக் அமிலம் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் கசகசா அதிகம் அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் உங்களுக்கு நன்மை தரும்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்

கசகசா விதைகளில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இதில் உள்ள துத்தநாக மூலக்கூறுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் முக்கியமாக தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இந்த விதைகள் உடலில் நோயெதிர்ப்பு செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

இதயத்துக்கு நல்லது

கசகசாவில் அடங்கியுள்ள துத்தநாகம் சுவாசக் கோளாறுகளை குறைக்க உதவுகிறது. இது உடலில் கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமன்றி கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஒமேகா - 3 மற்றும் ஒமேகா - 6 மூலக்கூறுகள் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு நன்மை புரிகிறது.

நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது

கசகசா விதைகளின் ஏராளமான மருத்துவப் பயன்களுடன் இது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் முறைப்படுத்துகிறது. நீரழிவு நோயாளிகளுக்கு கசகசா விதைகளில் அடங்கியுள்ள அதிக அளவு நார்ச்சத்தும் மாங்கனீசும் சர்க்கரை நோய்க்கு குணமளிப்பதற்கு சிறந்தது.

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

சிறுநீரகக் கற்களால் அவதிப்படுபவர்கள் கசகசா விதைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணலாம். இது சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதுடன் மீண்டும் வராமல் தடுக்கிறது.

ஆனால் ஹைப்பர்ரோக்ஸ்லூரியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கசகசாவை தவிர்த்து விடுங்கள் அல்லது கசகசா சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதில் அடங்கியுள்ள ஆக்சாலிக் ஆசிட் கால்சியம் ஆக்ஸலேட் (சிறுநீரகக் கற்கள்) உற்பத்தியை தூண்டும் அபாயம் உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 April 2024 6:40 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!