/* */

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

Plastic Awareness in Tamil -திடக்கழிவுக்களை கையாளுவதற்கு கட்டணமும் உடனடி அபராதமும் விதிப்பதற்கான துணைச் சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி
X

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

Plastic Awareness in Tamil -தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

பின்னர் மாவட் டஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

2016 ஆம் ஆண்டில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், திட கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, விதி 15-ன் படி திடக்கழிவுகளை சேகரித்தல், வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லுதல், செயல்முறைக்குள்ளாக்குதல், மறுசுழற்சி செய்தல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் வெளியேற்றுதல் ஆகிய பொறுப்புகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்தது.

திடக்கழிவுக்களை கையாளுவதற்கு கட்டணமும் மற்றும் உடனடி அபராதமும் விதிப்பதற்கான துணைச் சட்டங்கள் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, திடக்கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு 25.01.2017 தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாயிலாக மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியாக பிரித்து, சேகரித்தல், சேமித்தல், கொண்டு செல்லுதல், செயலாக்கம் மற்றும் வெளியேற்றுவதற்கான உள்கட்டமைப்பை தாமாகவோ, அல்லது நிறுவனங்களை அமர்த்தியோ அல்லது உற்பத்தியாளர்களை கொண்டு மேம்படுத்துவதற்கும் அமைப்பதற்கும் பொறுப்பாகும்.கழிவு மேலாண்மை அமைப்பை அமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளைச் செய்வதற்கு உள்ளாட்சி அமைப்பு பொறுப்பாகும்.

அதாவது, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தல், சேகரித்தல், சேமித்தல், கொண்டு செல்லுதல், பதப்படுத்துதல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்தல், திருத்தப்பட்ட இந்த விதிகளின் சரத்துக்களை பின்பற்றப்படுவதை உறுதி செய்தல்; இந்த செயல்பாட்டின் போது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்தல்;மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுப் பகுதியை மறுசுழற்சி செய்பவர்களுக்கு அனுப்புவதை உறுதி செய்தல்.

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி செய்ய முடியாத பகுதியின் செயலாக்கம் மற்றும் வெளியேற்றுதலை உறுதி செய்தல்,அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அவர்களின் பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கழிவு சேகரிப்பாளர்களுடன் பணிபுரியும் பொது அமைப்புகள் அல்லது குழுக்களை ஈடுபடுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்காமல் இருப்பதை உறுதி செய்தல். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை அமைப்பை அமைப்பதற்கான உள்ளாட்சி அமைப்பு உற்பத்தியாளர்களின் உதவியை நாட வேண்டும், மற்றும் அத்தகைய அமைப்பு இந்திய அரசிதழில் இந்த விதிகள் இறுதியாக வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் .

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் மாசில்லா மாநகராட்சியாக உருவாக்குவதற்கு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தும் நமது சுற்றுச் சூழலை காப்பது நமது கடமை என்ற உணர்வுடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது மற்றும் மாற்றுப் பொருள்களை பயன்படுத்துவது தொடர்பான பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் தஞ்சை இரயிலடியிலிருந்து அண்ணா நூற்றாண்டு மண்டபம் வரை நடைபெற்ற பேரணியில், பூண்டி புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள், மன்னர் சரபோஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பான் செக்கர்ஸ் மகளிர் கலைக் கல்லூரி, கவின் மிகு தஞ்சை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள்,தொழிற்சாலைகள்,வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருள்களை தடைசெய்வதை நிறைவேற்றும் பொருட்டு நெகிழியை சேமித்தல், வழங்ககுதல்,விற்பனை செய்தால் முதல்முறையாக அபராதமாக ரூ.25000-ம், வணிகவளாகங்கள், துணி கடைகளில் பயன்படுத்தினால் ரூ.10000-ம்,மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற நடுத்தரவணிக நிறுவனங்களுக்குரூ.1000-ம்,சிறுவணிக நிறுவனங்களுக்குரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இப்பேரணியில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவிசெயற்பொறியாளர் ராஜசேகரன்,உதவி இயக்குனர் ( ஊராட்சிகள்) .சங்கர், மாசுக் கட்டுப்பாட்டுவாரிய உதவிசெயற்பொறியாளர் விஜய பிரியா, வட்டாட்சியர் சக்திவேல்,ரெட்கிராஸ் மாவட்டபொருளாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Feb 2024 10:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?