/* */

அம்மாவுக்கு ஒரு அஞ்சலி..! கவிதாஞ்சலி..!

அம்மா என்ற ஒரு மாய சக்திகொண்ட வார்த்தைக்கு முழுப்பொருளை அந்த அம்மா இல்லாதபோதுதான் முழுமையாக உணரமுடியும்.

HIGHLIGHTS

அம்மாவுக்கு ஒரு அஞ்சலி..! கவிதாஞ்சலி..!
X

Amma Ninaivu Anjali Kavithai in Tamil

ஒரு பழைய யூத பழமொழி கூறுகிறது, "கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் தாயை படைத்தானாம்.பிரபஞ்சத்தைப் படைத்தளித்த பரம்பொருள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாயைத் தந்துள்ளான், அந்த யூத பழமொழியைப்போல. ஆனாலும் தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் இல்லை. இருவருமே கடவுள்தான்.

Amma Ninaivu Anjali Kavithai in Tamil

அம்மா நினைவு அஞ்சலி கவிதை

தாயே எம் தயாளத் தாயே..

தாயாக எமக்கு வந்து

தாங்கிக் கருத்தரித்து

பிள்ளைகளாய் உருக்கொடுத்து

ஈரைந்து மாதங்கள் சுமந்து

ஈன்று பாலூட்டி சீராட்டி

நோயேதும் தீண்டாது

நுணுகி எமைக் காத்து

ஆளாகி நாம் எழவே

ஆயிரமாம் தொல்லைகளை

நீ தாங்கி நின்றாயே

நாம் அதற்குப் பரிசாக

எதைத் தந்தோம்?

என்ன செய்தோம்?

என்றே எம் நெஞ்சம்

இன்று வெந்து துடிக்கிறதே..!.

Amma Ninaivu Anjali Kavithai in Tamil

எமக்கான நும்பணியை

நெஞ்சாரச் செய்து

நிறைவொன்றை எய்துதற்குள்

நில்லாது போய்விட்டாய்

பொல்லாத காலனவன்

கல்லாக எமை எண்ணி

முள்ளாக தைத்த நெஞ்சில்

வேலினையும் பாய்த்துவிட்டான்..

எம் நெஞ்சம் வெறுமையாக

வெந்து அழுகிறதே..!

வெந்துயரில் நாம் மூழ்கி

வேதனையில் துவண்டு தினம்

வெம்பி மனம் புண்ணாகி நிற்கின்றோம்

எம் தாயே

ஆயிரம் பேர் அன்பு சொரிந்தாலும்

நின் தாயன்பிற்கு இணையாகுமா?

இனி எமக்கேது துணை

இவ் வையகத்தில்...?

Amma Ninaivu Anjali Kavithai in Tamil

உங்கள் நினைவுகளில்

எம்மோடு உரையாடிய

இனிய பொழுதுகளும்

பண்டிகை நாட்களிலே

பண்டங்கள் செய்து

உண்டு மகிழ்ந்ததும்

சோதரச் சண்டையில்

செல்லமாய் தலையில்

குட்டியதும் என்றும்

நினைவில் நின்று

வாட்டுதம்மா..!

வெதும்பி வெதும்பி அழுகின்றோம்

வேதனையில் தவிக்கின்றோம்

எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்

ஒளிர்ந்த எம் தாயே

நீங்கள் அணைந்து நான்கு ஆண்டுகள்

ஓடி மறைந்தாலும்

உங்கள் ஒளிமுகத்தை முன்னிறுத்தி

என்றும் உங்கள் நினைவுடனே

வாழுகின்றோம்.

என்றும் எம் நினைவில் எம்முடனும்

நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட

உங்கள் ஆன்மா

சாந்தியடைய இறைவனை

என்றும் பிரார்த்திக்கின்றோம்.!

Amma Ninaivu Anjali Kavithai in Tamil

ஆண்டுகள் பல ஓடி

காலங்கள் கழிந்தாலும்

எங்கள் அன்பான அன்னையின்

நினைவுகள் என்றும் எம்முடன்

நிலைத்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய

இறைவனை பிராத்திக்கின்றோம்..

ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..!

வானத்து முழு நிலவாய் எம் வாழ்வு வளம் பெற

என்றும் ஆசியும், ஒளியும் வேண்டும்

அன்பு அம்மாவே – எம் மன

வானில் உங்கள் நினைவுகள்

நீங்காது வலம்வர இறையருள் வேண்டும்.

ஆண்டுகள் நகர்ந்தாலும்

எமைவிட்டு அகலாது உங்கள் அன்பான நினைவு

உங்கள் நினைவுகள் வருகையில்

நாம் நிலைகுலைந்து போகின்றோம்

உங்களை நினைக்காத நாளில்லை

எம்முன் என்றும் நிறைந்துள்ளீர்கள் அம்மா!

Amma Ninaivu Anjali Kavithai in Tamil

எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய்

பண்பும் பாசமும் நிறைந்த ஒளி விளக்காய்

ஊரே போற்றும் உத்தமியாய்

தலைவனிற்கு தலைவியாய்

பார் போற்றும் அன்னையாய்

இல்லறத்தில் மருமகள் என்பதற்கு

முன்னுதாரணமாய் முத்தாரமாய்

குலம் தழைத்துயர வளம் தரும் பேர்த்தியாய்

இறைபணியால் எமக்கோர் வழிகாட்டியாய்

நானிலம் போற்ற வாழ்ந்த அன்னையே

உம்பாதம் பணிகின்றோம்..

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

எம் பாசத்தின் அருமைத் தாயே

கண்ணீராய் ஆற்றிவிட கண்ணீரும்

இல்லையம்மா

உங்களை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டதம்மா

தவமாய் தவமிருந்து பெற்ற ரத்தினத்தை கூட

ஆசையாய் உணவூட்டி அழகாய் ஆடையிட்டு

அன்பினால் அரணவணைக்கக் கூட

முடியாமல் அம்மா

உங்களை பாவி காலன் பறித்து விட்டானே

கதறி அழுகின்றோம் அம்மா

எங்கள் அன்புத் தெய்வம் ஆத்மா சாந்தியடைய

எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!

Amma Ninaivu Anjali Kavithai in Tamil

எமை பெற்றெடுத்துப் பாசத்துடன் அரவணைத்து

அரும்பாடுபட்டு எம்மை ஆளாக்கி வாழ்வின் வழிகாட்டியாய்

எம்மை வாழவைத்த அன்புத் தாயே!

ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா ஆறவில்லை எங்கள் மனம்

ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்

அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா..

நித்தமும் உங்களை நினைத்து நிழல் தேடி அலைகின்றோம்

நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட

உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல

இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

Updated On: 17 April 2024 1:03 PM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  4. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  7. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  8. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  9. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  10. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!