/* */

ஹரியானாவில் எத்தனால் ஆலை: பிரதமர் மோடி திறப்பு

ஹரியானா மாநிலத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ரூ.900 கோடி மதிப்பிலான எத்தனால் தயாரிப்பு ஆலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

HIGHLIGHTS

ஹரியானாவில் எத்தனால் ஆலை: பிரதமர் மோடி திறப்பு
X

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். காணொளி மூலம் நடக்கும் விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

பானிப்பட்டில் உள்ள அரசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த எத்தனால் ஆலையில் , ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் வைக்கோலைப் பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலையில் தினமும் 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும் என்பதால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.

நாட்டில் உயிரி எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆலை அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Updated On: 11 Aug 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?