குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடி விடுவிப்பை எதிர்த்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

Modi Live News Today -குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிப்பை எதிர்த்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடி விடுவிப்பை எதிர்த்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
X

புதுடெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் (கோப்பு படம்).

Modi Live News Today -கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா என்னுமிடத்தில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது. அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் உயிரிழந்தனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின்னர், கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.அந்த சிறப்பு விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி, காவல்துறை அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 59 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை எனக்கூறி விடுவித்தது.

எஸ்.ஐ.டி.யின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், குஜராத் உயர்நீதிமன்றத்திலும், முன்னாள் எம்.பி. ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-24T14:49:51+05:30

Related News

Latest News

 1. வானூர்
  வானூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
 2. தென்காசி
  பார்வையற்றோருக்கான உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள்...
 3. குமாரபாளையம்
  விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு விருது வழங்கிய கராத்தே மாஸ்டர்
 4. தென்காசி
  தென்காசியில் வரும் 4 ம் தேதி மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைத் தீர்...
 5. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 874 ஹெக்டேர்...
 7. விக்கிரவாண்டி
  விக்கிரவாண்டி பேரூராட்சியில் முக கவசம் அணிய விழிப்புணர்வு தீர்மானம்
 8. நாமக்கல்
  நாமக்கல் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
 9. திருவண்ணாமலை
  உயர்கல்வியில் சேரும் மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட...
 10. சினிமா
  எதிர்பாராத வெற்றியில் 'மாயோன்':கேக் வெட்டிக் கொண்டாடிய...