/* */

தேர்தல் பொது கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை: ஜனவரி 31 வரை நீட்டிப்பு

முதல் மற்றும் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு சில தளர்வுகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

HIGHLIGHTS

தேர்தல் பொது கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை: ஜனவரி 31 வரை நீட்டிப்பு
X

தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை ஜனவரி 31ம் தேதிவரை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.

தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணயைர்கள் ராஜீவ் குமார், அனுப் சந்திரா பாண்டே , பொதுச் செயலாளர் மற்றும் துணை ஆணையர்கள் ஆகியோர் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தற்போதைய கொவிட் நிலவரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். தேர்தல் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். தற்போதுள்ள சூழலில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் விவாதித்தது.

அனைத்துத் தரப்பு அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டபின்பு, பிரச்சார காலத்துக்கான தேவைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்தது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஜனவரி 27ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஜனவரி 31ம் தேதியும் இறுதி செய்யப்படும்.

தற்போதைய சூழல்களை கருத்தில் கொண்டு, கீழ்கண்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் எடுத்தது:

(1) 2022 ஜனவரி 31ம் தேதி வரை பொதுக்கூட்டம், பாதயாத்திரை, சைக்கிள் மற்றும் பைக் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை.

(2) முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 27ம் தேதி இறுதி செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்தவெளியில் அதிகபட்சம் 500 பேர் அல்லது மைதானத்தின் கொள்ளவில் 50 சதவீதம் அல்லது மாவட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதிக்கும் வரம்பு இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம்.

(3) 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஜனவரி 31ம் தேதி இறுதி செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை, மேலே கூறப்பட்ட நிபந்தனைகள் படி கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.

(4) வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்வோர் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. 5 நபர்களுக்கு பதிலாக, தற்போது 10 பேர் வரை (பாதுகாவலர் நீங்கலாக) வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய முடியும்.

5) உள்அரங்கு கூட்டங்களில் அதிகபட்சம் 300 பேர் அல்லது அரங்க இருக்கைகளில் 50 சதவீதம் பேர் பங்கேற்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே தளர்வு அளித்திருந்தது.

(6) பிரச்சாரத்துக்கு வீடியோ வேன்களை திறந்த வெளியில் அதிகபட்சம் 500 பார்வையளர்களுடன் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தனியாக அனுப்பப்பட்டுள்ளன.

(7) கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

(8) மேலே கூறப்பட்ட விஷயங்களை அமல்படுத்துவது அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பு.

(9) மீதமுள்ள அனைத்துக் கட்டுபாடுகளும், கடந்த 8ம் தேதி வெளியிட்ப்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளபடி தொடரும்.

இந்த அறிவுறுத்தல்கள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்வர்.

இந்த அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் பின்னர் மறுஆய்வு செய்யும் என அறிவித்துள்ளது.

Updated On: 22 Jan 2022 4:44 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...