/* */

275 பேரை பலி வாங்கிய கோரமண்டல் ரயில் விபத்து பற்றி சி.பி.ஐ. விசாரணை

275 பேரை பலி வாங்கிய கோரமண்டல் ரயில் விபத்து பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு ரெயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

HIGHLIGHTS

275 பேரை பலி வாங்கிய கோரமண்டல் ரயில் விபத்து பற்றி சி.பி.ஐ. விசாரணை
X

மூன்று ரயில்கள்  மோதிக்கொண்ட கோர காட்சி.

275 பயணிகளின் உயிரை காவு வாங்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்திருப்பதாக ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அதே நேரத்தில் இன்னொரு தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளின் மீது மோதியது. ஒரே இடத்தில் மூன்று ரயில்கள் மோதி கொண்டதால் இரண்டு பயணிகள் ரயில் பெட்டிகளும் தண்டவாளத்தில் சிதறி கிடந்தன. இந்த கோர விபத்தில் 288 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இ்ந்நிலையில் தற்போது 275 பயணிகள் இறந்திருப்பதாக ஒடிசா மாநில தலைமை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்..

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கோரமான விபத்து இது என கூறப்பட்டு உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி நேற்று நேரடி ஆய்வு நடத்தினார். விபத்துக்கு காரணமான யாரும் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

ரயில் விபத்துக்கான காரணம் பற்றி ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பழுதாகி லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதற்கு சிக்னல் கோளாறு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழுதாகி நின்ற சரக்கு ரயில் லூப்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் அதே தண்டவாளத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் லைனில் செல்வதற்கான அறிவிப்பு எதுவும் டிரைவருக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் ரயில்வே சிக்னல் போர்டில் அது மாற்றப்பட்டு இருப்பதாகத்தான் காட்டுகிறது. ஆனால் களத்தில் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் இந்த விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்னணு இன்டர்லாக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்திற்கு காரணம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து சம்பவம் பற்றி விசாரிக்க சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். எனவே இந்த ரயில் விபத்து பற்றி சி.பி.ஐ. போலீசார் விரைவில் தங்களது விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 5 Jun 2023 8:04 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?