/* */

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

வி.ஐ.டி. பல்கலைக்கழககத்தில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ம் தேதி நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிமுதல் 3 மணிவரை வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

முகாமில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இதில் 150 -க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் முகாமில் பங்கு பெற உள்ளனர்.

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ. டிகிரி, நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதி தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம்.

தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டது.

தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896, 8610977602, 8778078130, 8148727787, 9095559590 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Updated On: 4 May 2023 4:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...