/* */

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு +2 தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு-தமிழக அரசு

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு +2 தேர்வெழுதுவதில் இருந்து விலக்களித்து முதலமைச்சர் அறிவிப்பு. அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு +2 தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு-தமிழக அரசு
X

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு +2 தேர்வெழுதுவதில் இருந்து விலக்களித்து முதலமைச்சர் அறிவிப்பு. அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது மதிப்பீட்டு முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

நமது மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விளக்கு அளித்ததைப் போல 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்நடைபெற உள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட பிரிவு 17 (i) அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக தங்களை அறிவிக்க இயலாது என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆணையிடப்பட்டுள்ளது

Updated On: 31 July 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு