பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு. ரேண்டம் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கான சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு. ரேண்டம் எண் வெளியீடு
X

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி இ, பிடெக், பி ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. என்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்பபதிவு ஜுன் 4 ஆம் தேதியுடன் நிறைவடந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர் இந்த மாணவர்களுக்கான தரவரிசயை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது ரேண்டம் என் மூலம் முடிவு செய்யப்படும்.

தரவரிசை பட்டியல் ஜூன் 26ம் தேதி வெளியிடப்படும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது தொடர்பான புகார்களை ஜூன் 26 முதல் 30ம் தேதி வரை சேவை மையங்களில் தெரிவித்து நிவாரணம் பெற முடியும். இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்க உள்ளது.

ஜூலை 2 முதல் 5 தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 தொடங்கி ஆகஸ்டு 24 வரை நடக்கிறது.

மாணவர்கள் ரேண்டம் எண் மற்றும் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

Updated On: 7 Jun 2023 5:59 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா