/* */

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள் பள்ளி கல்வித்துறையுடன் இணைப்பு

மாநிலம் முழுதும் உள்ள 1138 ஆதிதிராவிட பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள்  பள்ளி கல்வித்துறையுடன் இணைப்பு
X

பைல் படம்

வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளிக் கல்வி துறையுடன் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை ஹிந்து சமய அறநிலையதுறை வனத்துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு துறையும் மேற்கொண்டுள்ளது.

இந்த வரிசையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1138 பள்ளிகள் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிக் கல்வி துறையில் இணைக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள் தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஆதிதிராவிட நலத் துறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அதன் இயக்குநர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.இந்த பணி நிறைவடைந்ததும், அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். இதர பல்வேறு வசதிகளும் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 May 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...