இதை சாப்பிடுங்க... தலைக்கு 'உள்ளே, வெளியே' - இரண்டுக்குமே நல்லது

walnut meaning in tamil- தலை முடி வளர்ச்சி, மூளை புத்துணர்ச்சி இரண்டுக்குமே உதவுகிறது வால்நட்ஸ். அதுமட்டுமின்றி, உடல்சார்ந்த பல பிரச்னைகளுக்கு இது தீர்வளிக்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இதை சாப்பிடுங்க... தலைக்கு உள்ளே, வெளியே  - இரண்டுக்குமே நல்லது
X

walnut meaning in tamil- வால்நட்ஸ் சாப்பிடுங்க... ஆரோக்கியமா இருங்க!

walnut meaning in tamil- ஆங்கிலத்தில் 'வால்நட்ஸ்' என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் நீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.


'வால்நட்' உண்பதால், கிடைக்கும் நன்மைகள்

தலைமுடி வளர்ச்சி

வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.


மூளை செயல்பாடு

வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.


மார்பக புற்று

இப்போதைய காலகட்டத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்று நோய் இருக்கிறது. வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் தீங்கான நுண்ணுயிரிகளையும் அழிக்கிறது.

தூக்கம்

நரம்புகள் பாதிப்புகளால் சிலருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. தினமும் இரவு உணவின் போது வால்நட்ஸ் பருப்புகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் நன்கு உறக்கம் ஏற்படும். மன அழுத்தங்களும் குறையும்.


சுவாச நோய்கள்

ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற நோய்கள் நுரையீரல்களில் தோன்றுவதாகும். இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்புகளை தினமும் இருவேளை உண்டு வருவது இப்பிரச்சனையிலிருந்து சற்று நிவாரணம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தோல் பராமரிப்பு

நமது உடலின் வெளிப்புற பகுதியான தோல் சிறிது ஈரப்பதத்தோடு இருப்பது ஆரோக்கியமானது. வால்நட்ஸ் பருப்புகள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. தோல் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது.


இதயம்

உடலுக்கு ஆதாரமாக இருப்பது இதயம் ஆகும். வால்நட் பருப்புகள் இதய தசைகளை நன்கு வலுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்த ஓட்டங்கள் சீராக இருப்பதற்கு வால்நட் பருப்புகள் உதவுகிறது.

வயிறு

உண்ணப்படும் உணவுகளை செரித்து உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றும் பணியை வயிறு செய்கிறது வால்நட்ஸ் பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு செரிமானத்திறன் மேம்படுகிறது வயிற்றில் அமிலங்களின் சுரப்பை சீராக்குகிறது.

வலிப்பு நோய்

பிறக்கும் போதே ஏற்படும் நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வான மருந்துகள் மிகவும் குறைவு. வால்நட்ஸ் பருப்புகளை இந்த பாதிப்பு கொண்டவர்கள் உண்பது நிவாரணம் அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பித்தப்பை

நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கிறது. பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. அதை கரைப்பதில் வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது.

எனவே, உடல் நலத்தை பேணுவதில், ஆரோக்கியத்தை காப்பாற்றுவதில் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கிறது வால்நட்ஸ் என்பதை, இனி மறந்து விடாதீர்கள்.

Updated On: 24 Dec 2022 7:58 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்