இதயம் காப்போம் - இன்று உலக இதய தினம்!

இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29, இன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இதயம் காப்போம் - இன்று உலக இதய தினம்!
X

இன்று உலக இதய தினம்

இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது. கரோனரி தமனிகளில் கொழுப்பு மற்றும் கால்சிபைட் பிளேக் குவிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, உணவு பழக்கம் மற்றும் புகைத்தல்,மது போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. தற்போதைய காலத்தில் குறைந்த வயதினருக்கு கூட மாரடைப்பு வருவதை காண முடிகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் மாரடைப்புகள் ஏற்படும் 50 சதவீதம் ஆண்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அதில் 25% சதவீதம் ஆண்கள் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று இந்திய இதய கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இதய நோயால் இறக்கும் பெண்களின் விகிதமும் அதிகம் என்றும் கூறுகிறது இந்த அமைப்பு. இந்தியாவில் மக்களின் இதய ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதற்கு இது ஒரு சிறிய சான்று.

நம் இதயத்தை, எளிமையான பழக்கவழக்கங்கள் மூலம் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, நம்முடைய மனத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது, தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் உறங்குவது முக்கியம்.

மது அருந்துததல், புகைப்பிடித்தல், அல்லது பாக்கெட்டில் வரும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், உடலின் ரத்த அழுத்தம், எடை, சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

இரவில் பணி செய்பவர்களில் இதய துடிப்பு 20 முதல் 25 சதவீதம் சீராக இல்லை என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதே போல், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்கள், பகலில் பணி செய்பவர்களை விட இவர்களுக்கு அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கு இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, வெளிச்சம் இல்லாத அறையில் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்க வேண்டும். அவர்கள் நேரம் கிடைக்கும்போது அல்லது வேலைக்கு செல்வதற்கு முன், உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் 40 வயதில் இருப்பவர்கள் இதய நோய்களுக்கு அதிகமாக வருகிறது. எனவே, இதற்கு புகைப்பிடிப்பது இதய நோய்கள் ஏற்பட ஒரு முக்கிய காரணம். அடுத்து, இப்போது பலரும் உட்கார்ந்தே செய்யும் பணிகளில் இருக்கின்றனர். இதனால் உடல் இயங்க வாய்ப்பு குறைந்துவிடுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்தாலே, இதய நோயிலிருந்து பெரிதும் தப்பலாம்.

மன அழுத்தம் இருக்கும்போது, நமது உடலில் கேட்டிகோலமைன் (catecholamines) அதிகம் சுரக்கும். இது இதய துடிப்பை, ரத்த அழுத்ததை அதிகப்படுத்தும் வாய்ப்புள்ளது. இதுவும் இதய நோய்க்கு இட்டு செல்லும். நம் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழக வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரக்கும். இதனால், 40, 45 வயது வரை அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும். ஆனால், மாதவிடாய் நின்றதும், ஆண்களுக்கு இணையாக அவர்களுக்கும் இதய நோய் வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த வயதில், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது.

அரிசி, உப்பு, சர்க்கரை போன்றவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆயத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், புட்டிகளில் வரும் பானங்கள், உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளும் பழங்களும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

பீட்சா, பர்க்கர் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் நம் உடலில் கொழுப்பு அதிகமாகும். இதனால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். முடிந்த அளவு இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவற்றை வழக்கமான உணவாக சாப்பிடக்கூடாது.

உடல் பருமன் இருக்கும்போது உடலில் உள்ள கொழுப்பும், ரத்த அழுத்தமும் அதிகமாகும் வாய்ப்புள்ளது. உடலில் உள்ள சர்க்கரை அளவும் அதிகமாகலாம். இவையெல்லாம், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது நல்லது. வயதுக்கு ஏற்ற எடை அல்லது உயரத்திற்கு ஏற்ற எடையை அடைய இலக்கு வைத்து உடற்பயிற்சி செய்வது பலன் தரும்.

ஆரோக்கியமான உணவு:

உணவு மிக முக்கியமானது, ஏனென்றால் உணவு எப்போதும் மருந்தாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான இதயத்திற்கு அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்கள், பச்சைப் பயறு (பருப்பு), பருப்பு வகைகள், முழு தானியங்கள், பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்க்கவும். உணவில் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் போன்றவற்றையும் சேர்க்கவும்.

தியானம்:

தியான பயிற்சி உங்களை இதய நோய்களிலிருந்து ஓரளவுக்கு பாதுகாக்கும். தியானம் நம் மனதை அமைதியாக வைத்திருக்கிறது. இது நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுகிறது. மனதிற்கு ஓய்வு அளிக்கிறது. மன அழுத்தத்தை நீக்குவதுடன், நம் இதயத்தின் அழுத்தத்தையும் குறைக்கிறது. தியானம், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

உடற்பயிற்சி மற்றும் யோகா:

தொடர்ந்து 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது, இதயத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. யோகா பயிற்சியினால் சுவாசத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதயத் துடிப்பை மேம்படுத்துதல், கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்த:

ஆரோக்கியமான இதயத்தின் செயல்பாட்டில் மன அழுத்தம் பெரும் பங்கு வகிக்கிறது. இது கொலஸ்ட்ரால் அளவை விரைவாக அதிகரிப்பதுடன் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இது இதயம் மற்றும் இரத்த நாள நோய்க்கு வழிவகுக்கும். எனவே, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம். மன அழுத்தத்தைக் குறைக்க எளிய மற்றும் பயனுள்ள வழிகளில் தியானம், அமைதி, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

போதுமான துாக்கம்:

உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு தூக்கம் அவசியம். தூக்கமின்மை இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற நல்ல தூக்கம் அவசியம்.

மூலிகை:

உணவில் மூலிகைகளைச் சேர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இலவங்கப்பட்டை, பூண்டு, மிளகு, கிராம்பு, இஞ்சி, மஞ்சள் போன்ற பல்வேறு வகையான மூலிகைகள் பல மருத்துவ குணங்களுக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

இந்த ஆறு குறிப்புகளை வாழ்க்கையில் சரியான முறையில் கடைபிடிப்பவர்கள், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்தும், மற்றும் பிற நோய்களில் இருந்தும் தங்களை காத்துக்கொள்ள முடியும்.

Updated On: 30 Sep 2022 5:30 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  yercaud flower show 2022: இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு...
 2. டாக்டர் சார்
  pentids 400 uses in tamil பல், தோல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு...
 3. லைஃப்ஸ்டைல்
  nanban quotes in tamil: நட்பின் அழகையும் முக்கியத்துவத்தையும்...
 4. நாமக்கல்
  தென்னிந்திய தடகள போட்டியில் கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி சாதனை
 5. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைக்கு ஆன்லைன் மூலம் லைசென்ஸ்
 6. காஞ்சிபுரம்
  பட்டப்பகலில் பைனான்ஸ் ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 2பேர்...
 7. காஞ்சிபுரம்
  உத்திரமேரூர் அரசு பள்ளிக்கு ரூ 63.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய...
 8. காஞ்சிபுரம்
  டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
 9. லைஃப்ஸ்டைல்
  lotion meaning in tamil லோஷன் என்பது அழகு சாதனப் பொருள்...
 10. காஞ்சிபுரம்
  பைக் சாகச யூடியுபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக...