/* */

'கசக்குதே'ன்னு பாகற்காயை ஒதுக்காதீங்க... அப்புறம் பிரச்னை உங்களுக்குதான்!

'பாகற்காய்' என்ற பெயரைக் கேட்டும்போதே பலருக்கும், நாக்கு கசக்க ஆரம்பிக்க விடுகிறது. பாகற்காய் அதிகப்படியான கசப்புச் சுவை கொண்டது. ஆனால், இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. உடல் எடையைக் குறைக்க உதவுவதில் இருந்து, இன்னும் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பாகற்காய் கொண்டிருக்கிறது.

HIGHLIGHTS

கசக்குதேன்னு பாகற்காயை ஒதுக்காதீங்க... அப்புறம் பிரச்னை உங்களுக்குதான்!
X

பாகற்காய் சாப்பிடுங்க... பயன்கள் நிறைய இருக்கிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாப்பாட்டு தட்டில் பாகற்காயை பார்த்தாலே, முகம் சுளித்து ஓரம்கட்டி வைத்துவிடுவர். ஒரு சிலர், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். நோய் வராமல் தடுக்கும் என்பதற்காக மட்டுமே, பாகற்காயை 'கஷ்டப்பட்டு' சாப்பிடுவது உண்டு. ஆனால், பாகற்காய் மற்ற காய்கறிகளை போல, ரசித்து, சுவைத்து சாப்பிட வேண்டிய ஒன்று. அதன்கசப்பு, சிலமுறை சாப்பிட்டால் நாக்குக்கு பழகிவிடும். அதன்பின், சகஜமாக மற்ற காய்கறிகளை போலவே சாப்பிட முடியும்.


பாகற்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. பாகற்காய் என்று சொன்னாலே, அது சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், எல்லோரும் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளில் ஒன்று பாகற்காய். குறைந்தது வாரத்துக்கு இரண்டு முறையாவது பாகற்காயை சாப்பிட வேண்டும். அதன் பயன்களை அறிந்தால், நிச்சயம் நீங்கள் பாகற்காயை விரும்பி சாப்பிடுவீர்கள்.


ரத்தம் சுத்தமாகும்

பாகற்காய்க்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் பண்புகள் அதிகம். இதிலுள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகளால், ரத்தம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. பாகற்காயை வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம், உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விஷத் தன்மையைப் போக்க செய்யும்.


​எடை குறையும்

பாகற்காய் உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தங்களுடைய 'டயட்'டில் பாகற்காயைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதில் கலோரி அளவு மிகவும் குறைவு. அதோடு மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். ஆகையால் உடல் எடையை வேகமாகக் குறைத்துவிட முடியும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்

டைப் 2 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு பாகற்காய் ஓர் அருமருந்து. டைப் 2 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், தங்களுடைய தினசரி உணவில் பாகற்காயை சேர்த்துக் கொள்வதன் மூலமாக, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


சரும பாதுகாப்பு

பாகற்காயில் அதிகமான வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது என்பதால், சரும சேதத்திலிருந்து தடுத்து சருமத்தைப் பொலிவாக வைத்திருக்கச் செய்யும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

பாகற்காயில் வைட்டமின் அதிகமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமானதாக இருந்தால் தான், நம்முடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்கும்போது, நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் நோய்கள் ஏற்படாமல், பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.


இவ்வளவு நன்மைகள் நிறைந்த பாகற்காயை இனிமேல் அடிக்கடி சாப்பிடுங்கள். நீங்கள் மட்டுமின்றி, குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பாகற்காய் கசப்பு என்பது உண்மைதான். ஆனால், அதன் பலன்கள் தேனை போல இனிப்பானவை என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

Updated On: 8 Oct 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...