/* */

rowdy place in tamilnadu-தமிழகத்தில் ரௌடிகள் லிஸ்டில் எந்த மாவட்டம் முன்னிலையில் உள்ளது? பார்ப்போமா...?

rowdy place in tamilnadu-பொதுவாகவே நகரங்களில் மக்கள் தொகைப்பெருக்கம் அதிகரித்துவிட்டதால் குற்றச்சம்பவங்களும் பெருகிவிட்டன.

HIGHLIGHTS

rowdy place in tamilnadu-தமிழகத்தில் ரௌடிகள் லிஸ்டில் எந்த மாவட்டம் முன்னிலையில் உள்ளது? பார்ப்போமா...?
X

rowdy place in tamilnadu-ரௌடியிசம் (கோப்பு படம்)

rowdy place in tamilnadu-ரௌடி என்பதை போக்கிரித்தனம் அல்லது முரட்டுத்தனம் என்று கூறலாம். ஒரு ரௌடியிடம் மனிதாபிமானம் இருக்காது. கொலை செய்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமூக கட்டமைப்பின் பண்பாடு கலாசாரம் போன்றவைகளை துச்சமாக மதிப்பவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் அரசின் சட்ட திட்டங்களை அத்து மீறி செயல்படுபவர்களாகவே இருப்பார்கள். காவல் துறைக்கு சவாலாக இருப்பார்கள். சமூகத்தின் அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இவர்களே முதன்மையானவர்களாக இருப்பார்கள்.


தமிழ்நாட்டைப்பொறுத்தவரை ரவுடித்தனம் அதிகம் நடக்கும் இடமாக திருநெல்வேலி மாவட்டம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக ஆங்காங்கு சில மாவட்டங்களில் ரௌடித்தனங்களின் அட்டகாசங்கள் நடப்பதால் பொதுமக்கள் வாழ்வதற்கான சூழல் இல்லாமல் போகிறது. வேலை இல்லா திண்டாட்டம், போதிய வருவாய் இல்லாமை, பழிவாங்குதல் நடவடிக்கை என பல காரணங்கள் குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணிகளாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் நம்பர் 1 ரவுடி யார்?

"அட்டாக்" பாண்டி என்று அழைக்கப்படும் ப.பாண்டி. அவர் தமிழ்நாட்டின் மதுரை பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பலைச் சேர்ந்தவர் ஆவார் என்ற பதில் கிடைக்கிறது.

rowdy place in tamilnadu

சென்னையில் மிகப்பெரிய ரவுடி யார்?

"வெல்டிங்" குமார் சென்னையைச் சேர்ந்த ஒரு முக்கிய குற்றவாளி. வக்கீல் சண்முகசுந்தரம் மீதான தாக்குதலுக்கு அவர் பெயர் பெற்றவர். அதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் புழல் சிறையில் கைதிகளுடன் நடந்த சண்டையின் போது அவர் கொல்லப்பட்டார்.

டிஜிபி உத்தரவு

சென்னையில் கடந்த ஆண்டு மே மாதம் 3,674 ஆக இருந்த 'ரவுடிகள்' என்று என காவல்துறையினரால் வகைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி நிலவரப்படி 3,711 ஆக சற்றே அதிகரித்துள்ளது. தவிர, 'ஏ+' பிரிவில் (மிகப் பேர்போன சமூக விரோதிகள்) வகைப்படுத்தப்பட்ட ரவுடிகளின் எண்ணிக்கையும் இந்தக் காலகட்டத்தில் 69ல் இருந்து 92 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் கூட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் இருந்து சமூக விரோதிகள் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்திலே நடந்த குற்றச் சம்பவங்களின் அடிப்படையில் எங்கெங்கு எவ்வளவு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன எவ்வளவு ரௌடிகள் உள்ளனர் என்பது கீழே தரப்பட்டுள்ளது.

rowdy place in tamilnadu


சென்னையில் - 3175 பேர்

சென்னையில் கொலை,கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளலாம். கடந்த மே மாதம் 20 நாட்களில் சென்னையில் மட்டும் 18 கொலைகள் அரங்கேறி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருநெல்வேலியில் 1548 பேர்

ஏதோ திருநெல்வேலி என்றால் அல்வாவும், அரிவாளும் தான் சிறப்பு என்று எண்ணிவிடவேண்டாம். இந்த நெல்லைச்சீமையில், 1548 ரௌடிகள் உள்ளனர் என்பது ஆச்சர்யமே. இவர்களில் நெல்லை நகரில் மட்டும் 334 பேர் உள்ளதாக, காவல்துறை பதிவேடுகள் கூறுகின்றன.

rowdy place in tamilnadu


மதுரையில் 1372பேர்

மதுரை மாநகர் மீனாட்சியம்மன் குடிகொண்டிருக்கும் ஆன்மீக நகரம். மல்லிகைக்கு பெயர் போனது. இரவில் எந்நேரத்தில் மதுரைக்குப் போனாலும் மல்லிகைப்பூ போல இட்லி சாப்பிடலாம் என்பார்கள். அதே போல மதுரை என்றால் அடிதடிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. மதுரை மாநகரில் மட்டும் 888 ரவுடிகள் இருப்பதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது. புறநகரில் மட்டும் 484 பேர் உள்ளனர்.

கன்னியாகுமரியில் 748 ரௌடிகள்

கன்னியாகுமரி என்றால் நமக்கு சூரிய உதயம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மட்டுமே நினைவுக்கு வரும். அதேபோல ரவுடிகள் எண்ணிக்கையும் இவ்வளவா என்று ஆச்சர்யப்பட வைக்கும். ஆமாம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 748 ரவுடிகள் உள்ளனர். அந்தவகையில் இம்மாவட்டம் ரௌடிகள் எண்ணிக்கையில் தமிழகத்தில் 4ம் இடத்தில் உள்ளது.

rowdy place in tamilnadu

கோவையில் 738பேர்

தொழில் வளம் மிக்க நகரம். மரியாதை தெரிந்த, குளுமையான நகரம். கொங்கு மண்ணின் விருந்துபசாரம் போற்றுதலுக்குரியது. அப்படிப்பட்ட கோவையில் நகரில் மட்டும் 512ரௌடிகளும், புற நகரில் 226 ரவுடிகளும் உள்ளனர் என்கிறது அறிக்கை.

rowdy place in tamilnadu


பிற மாவட்டங்கள்

தமிழகத்தின் பிற மாவட்டங்களான கடலூரில் 680 ரௌடிகள், விருதுநகரில் 655 ரௌடிகள், சேலத்தில் 652 ரௌடிகள், தூத்துக்குடியில் 605 ரௌடிகள், தஞ்சை மாவட்டத்தில் 584 ரவுடிகள் இருப்பதாக காவல்துறை பதிவேடுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் அமைதிப் பூங்கா என்று நீகிரி மாவட்டக்த்தைத்தான் சொல்லலாம். அங்கு ரவுடிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அங்கு 65 ரவுடிகள் மட்டுமே காவல் துறை பட்டியலில் உள்ளனர்.

திருவாரூர், பெரம்பலூரில் தலா 84 பேர் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது தவிர காஞ்சிபுரத்தில் 416 ரௌடிகளும், திருவள்ளூரில் 318 ரௌடிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 452 ரௌடிகள், கடலூர் மாவட்டத்தில் 680 ரௌடிகள், வேலூர் மாவட்டத்தில் 376 ரவுடிகள் உள்ளதாக்க காவல்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளி விபரங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முந்தைய பட்டியல் அடிப்படையிலானது. அதனால் தற்போது இந்த எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையுடன் சற்று மாறுபட்டிருக்கலாம்.

rowdy place in tamilnadu


அண்மைய நடவடிக்கை

ஒன்று சில மாவட்டங்களில் ரௌடிகள் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் அல்லது சில மாவட்டங்களில் அதிகரித்தும் இருக்கலாம். இருப்பினும் தற்போது டிஜிபி சைலேந்திர பாபு ரௌடிகளை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதனால், பல மாவட்டங்களில் ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். இன்னும் பல ரௌடிகள் தலைமறைவாகவும் இருக்கலாம். இருப்பினும் தமிழக காவல்துறை ரௌடிகளை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Nov 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  5. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  10. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...