/* */

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே இன்று காலை மீண்டும் குண்டு வெடிப்பு

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே இன்று காலை மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

HIGHLIGHTS

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே இன்று காலை மீண்டும் குண்டு வெடிப்பு
X

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே இன்று காலை மீண்டும் குண்டு வெடித்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பஞ்சாப் பொற்கோவில் அருகே இன்று காலை மீண்டும் குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவில் உள்ளது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. சீக்கியர்கள் மட்டும் இன்றி அனைத்து மதத்தினரும் இதனை சுற்றுலா நோக்கில் பார்வையிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த பொற்கோவில் அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல்படி, வெடிகுண்டு படை மற்றும் எஃப்.எஸ்.எல். குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே ஹெரிடேஜ் தெருவில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெஹ்தாப் சிங் கூறுகையில் "நாங்கள் சரிபார்க்கிறோம். இங்கு நிலைமை சாதாரணமாக தான் உள்ளது. திங்கள்கிழமை காலை அமிர்தசரஸ் கோல்டன் டெம்பிள் அருகே ஹெரிடேஜ் தெருவில் இரண்டாவது குண்டுவெடிப்பு பதிவாகியுள்ளது. நாசவேலை எதிர்ப்பு, வெடிகுண்டு படை மற்றும் எஃப்எஸ்எல் குழுக்கள் இங்கு உள்ளன. ஒருவருக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

நேற்று, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு அருகில் உள்ள பாரம்பரிய தெருவில் ஏற்பட்ட வெடிப்பில், ஆறு பேர் சிறு காயங்களுக்கு ஆளானதாகவும், சில கட்டிடங்களின் கண்ணாடி முகப்புகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று மீண்டும் பொற்கோயிலின் ஒரு கிமீ சுற்றளவில் பலத்த வெடிச் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அந்த இடத்தில் இருந்த கரந்தீப் சிங் என்ற பக்தர் கூறுகையில், ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த சில சிறுமிகள் கண்ணாடித் துண்டுகளால் தாக்கப்பட்டு வெடித்ததில் சிறு காயங்களுக்கு ஆளானார்கள். ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இருந்து பொற்கோவிலில் தரிசனம் செய்வதற்காக சிறுமிகள் வந்துள்ளனர்.

நேற்று நடந்த குண்டுவெடிப்பு ஒரு உணவகத்தின் புகைபோக்கியில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் ட்விட்டரில், "அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, நிலைமை கட்டுக்குள் உள்ளது. சம்பவத்தின் உண்மைகளை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது, பீதி அடைய தேவையில்லை. குடிமக்களை வலியுறுத்துங்கள். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண, பகிர்வதற்கு முன் உண்மையைச் சரிபார்க்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்துங்கள்’ என்று பதிவிட்டு உள்ளார்.

Updated On: 9 May 2023 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!