/* */

ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்

திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்
X

திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்த வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 11 -12 -2023 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆபீஸர்ஸ் காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளருமான பிரபு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்/

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அரியமங்கலம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் பஷீர் (வயது 23 )மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அப்துல் கபூர் பஷீர் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒருவரிடம் செல்போனை வழிப்பறி செய்த வழக்கு மற்றும் ஆதாய கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது. எனவே அப்துல் கபூர் பசீர் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை தொடர்ந்து ஆணையர் காமினி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஆணை வழங்கினார். ஆணையரின் இந்த உத்தரவு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் கபூர் பஷீரிடம் வழங்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய அரியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி அப்பு என்கிற ஹரி கிருஷ்ணர், லட்சுமணன், ராஜேஷ் பைலட், ரியாஸ் ராஜ் ஆகியோர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகரில் இதுபோன்று கொலை கொள்ளை வழக்கில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரிக்கை எடுத்துள்ளார்.

Updated On: 29 Feb 2024 3:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்