/* */

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள வாரிசு: அதுக்குள்ளயா?

வாரிசு திரைப்படம், குடும்ப ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது

HIGHLIGHTS

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள வாரிசு: அதுக்குள்ளயா?
X

சன் டிவியில் விரைவில் வாரிசு?

விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் ஒரு குடும்ப கதை அம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்ததன் காரணமாக ரசிகர்கள் பலரும் குடும்பத்துடன் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்து வந்தார்கள். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியிருந்தார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த இப்படம் முதல் இரண்டு நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன்பின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் சக்கபோடு போட்டு வருகிறது.


இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெயசுதா, சரத்குமார், ராஷ்மிகா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் வாரிசு படத்துடன் துணிவு படமும் ரிலீஸ் ஆனதால் வாரிசு படத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. சிறப்பு காட்சிகள், திரையரங்கு ஒதுக்கீடு என வாரிசு படத்திற்கு அடுத்தடுத்து சறுக்கல்கள் ஏற்பட்டன. இதனிடையே வாரிசு படம் 210 கோடி ரூபாய் வசூலை குவித்ததாக வெளியான தகவலும் பொய் என தெரியவந்தது. இதனால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 11ம் தேதி வெளியான இப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 10ஆம் தேதி இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சி நிறுவனம் கைபற்றியுள்ளதாகவும், வரும் ஏப்ரல் 14-தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு உரிமையை சன் டிவி தான் வாங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திரைப்படம் சன் டிவியில் எப்பொழுது ஒளிபரப்பாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது ஒளிபரப்பாகப் போகிறது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதன்படி, வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டிற்கு வாரிசு திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.


பொங்கலுக்கு முன்பாக பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படம் சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் தினத்தில் தனுஷின் மாஸ் ஹிட்டான திருச்சிற்றம்பலம் படம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும், 'வாரிசு' படம் வெளியான மூன்றே மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On: 21 Jan 2023 6:53 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்