/* */

வரும் 25ல் 'மாஸ்' ரிலீஸ் 'கேங்ஸ்டா' பாடல்; உற்சாகத்தில் ஏகே ரசிகர்கள்..

Thunivu Gangsta Song Release Date-துணிவு படத்தின் 3-வது பாடலான ‘கேங்ஸ்டா’ என்ற பாடல், கிறிஸ்துமஸ் தினத்தன்று, வரும் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Thunivu 3rd Single Release Date
X

Thunivu 3rd Single Release Date-வரும் 25ல், அஜித் நடித்த ‘துணிவு’ பட மூன்றாவது பாடலான, ‘கேங்ஸ்டா’ பாடல் ரிலீஸ் ஆகிறது. 

Thunivu Gangsta Song Release Date-அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் 'துணிவு' திரைப்படம் வரும் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து, இசையமைப்பாளர் ஜிப்ரான் நேற்று காலை மூன்றாவது பாடல் குறித்து ட்விட்டரில் அறிவித்தார். இந்தப் புதிய பாடலை பாடகர் ஷபீர் சுல்தான் பாடியுள்ளார். 'துணிவு' படத்தின் முதல் இரண்டு பாடல்களான 'சில்லா சில்லா' மற்றும் 'காசேதான் கடவுளடா' ஆகியப் பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதையடுத்து நேற்று மாலை, 'துணிவு' படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், 'கேங்ஸ்டா' பாடலின் வரிகளை ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்டார். தமிழ் மற்றும் ஆங்கில வரிகள் கொண்ட இந்த பாடல் வெளியான பிறகு செம வைரலாகும் என்பது உறுதி. முன்பெல்லாம் முக்கிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்ட சில தினங்களுக்கு பின்புதான், படத்தின் வெற்றி வாய்ப்பு தெரிய வரும். அந்த படத்துக்கு ரசிகர்கள் தரும் வரவேற்பை, தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளை வைத்துதான் தீர்மானிக்க முடியும். இதற்காக, பட தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும், படத்தை இயக்கிய இயக்குநரும், 'பப்ளிக் எக்ஸாம்' எழுதிய மாணவர்களை போல, 'ரிசல்ட்'டுக்காக. படபடப்பாக காத்திருக்கும் நிலை இருந்தது.

ஆனால், இன்று படம் ரிலீஸ் செய்வதற்கு முன்பே வெளியாகும் பாடல்களும், அதற்கு சமூக வலைதளங்களில், ரசிகர்கள் தரும் வரவேற்பும் படத்தின் வெற்றியை ஓரளவு தீர்மானித்து விடுகிறது என்றே சொல்லலாம்.

ரசிகர்கள் 2023 புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், 'துணிவு' படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. ட்ரெய்லர் மற்றும் டீஸர் இரண்டையும் வெளியிட நேரம் குறைவாக இருப்பதால், நேரடியாக ட்ரைலர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. படத்தில் அஜீத் தவிர, மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, மமதி சாரி, வீரா, பிரேம் குமார், மற்றும் மகாநதி ஷங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

'துணிவு' படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் 'வாரிசு' படத்துடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.

'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன், 'துணிவு' படத்தில் கைகோத்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அவர் தவிர 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதால், படத்தின் தலைப்புக்கான எழுத்து பணத்தாள்களில் குறிப்பிடப்படும் எழுத்தை ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 'துணிவு' படத்தில் இடம்பெற்ற 'சில்லா சில்லா' பாடலும், அதைத்தொடர்ந்து, ' காசேதான் கடவுளடா' பாடலும். ஏகே ரசிகர்கள் மத்தியில் சக்கையான வரவேற்பு பெற்றுள்ள நிலையில், வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று 'மாஸ்' ஆக 'என்ட்ரி' தரும் 'கேங்ஸ்டா' பலத்த வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 April 2024 9:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு