/* */

நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு அவரது மனைவியின் முதல் பரிசு..!

Rishabh Shetty-ரிஷப்ஷெட்டியின் 'காந்தாரா', மீண்டும் கன்னடத்தின் பக்கம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

HIGHLIGHTS

Rishabh Shetty
X

Rishabh Shetty

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாகப் படைப்பாக உருவான,'பொன்னியின் செல்வன்' கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகெங்கும் வெள்ளித்திரையில் வெளியானது. படம் வெளியாகும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியது. ஆனால், அதே நாளில் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இரட்டை வேடங்களில் நாயகனாக நடித்து இயக்கி கர்நாடகத்தில் மட்டும் வெளியான படம், 'காந்தாரா'. இப்படம் வெளியான இரண்டாவது வாரத்தில் இந்தியத் திரைப்பட உலகத்தையே கர்நாடகாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது இப்படம்.

15 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கன்னடத்தில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனைபுரிந்த ஆறாவது படம் என்கிற சிறப்பைப் பெற்றுள்ளது. கடந்த 15/10/2022 அன்று முதல் தமிழிலும் வெளியாகியுள்ள, 'காந்தாரா' படம் மிகுந்த வரவேற்பையும் இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்கிற தாக்கத்தையும் எல்லா தரப்பினரிடையேயும் பெற்றுள்ளது.

Rishabh Shetty-ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான, 'கே.ஜி.எஃப்.', 'கே.ஜி.எஃப்- 2' படங்களைத் தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து படம் வெளியிடப்பட்டுள்ளது. 'காந்தாரா' படத்தை எழுதி இயக்கியதோடு இரட்டை வேடத்திலும் ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார். அவரின் அபாரமான நடிப்பைப் பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவும் அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டியின் என்ட்ரியே திரையரங்குகளை தெறிக்கவிட்டது. படத்தில் இடம்பெற்ற கூஸ் பம்ப்ஸ் காட்சிகளால் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். அன்பு, காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக, 'காந்தாரா' வந்துள்ளதால் அனைத்து மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியில் கடந்த அக்டோபர் 14-ம் தேதி வெளியான, 'காந்தாரா' படம் 8 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதியான ஞாயிற்று கிழமை மட்டும் இந்தப்படம் 4 கோடி வசூல் செய்திருக்கிறது. உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் குவித்திருக்கிறது.

இந்த நிலையில், யார் இந்த ரிஷப் ஷெட்டி என்கிற கேள்வி எல்லோர் மனத்திலும் எழுந்துள்ளது. இதனுடன் இன்னொரு சுவாரசியமான தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அது அவரது மனைவி பிரகதி ரிஷப் ஷெட்டிக்கு கொடுத்த முதல் கிஃப்ட் பற்றிய தகவல். கிஃப்ட்டில் என்ன இருந்தது என்பது தெரிய வந்ததும் அனைவருமே புருவம் உயர்த்தி வியப்பின் உச்சத்தில் போய் உட்கார்ந்துவிட்டனர். ஆம். ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி அவரது கணவருக்கு கொடுத்த முதல் கிப்ட் ஓல்ட் மங்க் ரம்மாம்.. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று கமெண்டுகளை சமூக வலைத்ததளத்தில் தட்டிவிட்டுக் கொண்டு வருகின்றனர். அதேபோல ரிஷப் ஷெட்டி தனது மனைவிக்கு கம்மல் ஒன்றை முதல் பரிசாகக் கொடுத்திருக்கிறாம். கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத்தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தெலுங்கிலும் வெளியிடப்பட்ட இந்தப்படம் வெளியான இரண்டு நாட்களில் 10 கோடி வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் வெளியான அன்றைய தினம் மட்டும் தோராயமாக 4.05 கோடியை காந்தாரா படம் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கர்நாடகாவில் வெளியான அன்றைய தினம் 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் காந்தாரா திரைப்படம் 17 நாட்கள் முடிவில் உலக அளவில் 100 கோடியை வசூல் செய்துள்ளது.

பல பிரபலங்களின் பாராட்டை பெற்று வரும் "காந்தாரா" திரைப்படத்தை நடிகர் தனுஷ், ராணா டகுபதி, பிரபாஸ் என பலரும் பாராட்டி வரும் வகையில் நடிகர் கார்த்தி ரிஷப் ஷெட்டியை நேரில் சென்று பார்த்து தனது பூரிப்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். கார்த்தி - ரிஷப் ஷெட்டி சந்திப்பு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 March 2024 5:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?