நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தில் சிலம்பரசன் பாடியிருக்கும் பாடல்

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் 'வாரிசு' திரைப்படத்தில், சிம்பு ஒரு பாடலைப் பாடியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் சிலம்பரசன் பாடியிருக்கும் பாடல்
X
வாரிசு திரைப்பட போஸ்டர்.

இளைய தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'வாரிசு' திரைப்படத்தில், நடிகர் சிலம்பரசன் ஒரு பெப்பி நம்பர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்தப் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகக் கொண்டாட்டத்தைக் கொடுத்துள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பி.வி.பி. சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தில் ராஜு, சிரிஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வம்சி படிப்பள்ளி இயக்க நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது.ஏற்கெனவே, 'வாரிசு' திரைப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியானது. அந்த வகையில், சிம்பு பாடிய அந்த பெப்பி பாடலை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள் என்ற தகவல் தற்போது படக்குழுவின் நெருங்கிய வட்டாரத்தின் மூலம் கசிந்துள்ளது.

இந்தத் தகவலால், நடிகர் விஜய் மற்றும் நடிகர் சிம்பு இடையில் உள்ள அழகிய நட்பு வெளிப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு பல பாடல்களை பாடி கவனம் ஈர்த்தவர் என்பது யாவரும் அறிந்ததே. மேலும், அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே தெறிக்கவிடும் சக்தி கொண்டவை என்பதும் அனைவரும் அறிந்ததே. அண்மையில்கூட பாலிவுட்டில் வெளியான 'டபுள் XL' திரைப்படத்தில் 'தாலி தாலி...' பாடல் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், இத்திரைப் படம் பொங்கல் வெளியீட்டுக்காகத் தயாராகி வருகிறது. இத்திரைப் படத்தின் 'ரஞ்சிதமே…' என்ற முதல் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடல் வெளியான சில தினங்களிலேயே மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ள இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடியுள்ளனர். அதகளப்படுத்தும் நம்பர் ஒன் பாடலாக இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தமிழில், 'தோழா' என்ற வெற்றிப் படத்தை நடிகர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் கொடுத்த வம்சி படிப்பள்ளியின் இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப் படம், பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் உள்ளிட்ட பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி, இத்திரைப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அண்மையில், படத்தின் முதல் சிங்கிள் வெளியானது.

இந்தப் பாடலின் படப்பிடிப்பும் அண்மையில்தான் நிறைவடைந்தது. முன்னதாக சித் ஸ்ரீராம் பாடிய பாடல்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடிகர் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே…' என்ற இந்தப் பாடலைத்தான் முதலில் வெளியிட வேண்டும் என்று படக்குழு மிகுந்த தீவிரம் காட்டிய நிலையில், 'ரஞ்சிதமே…' என்ற இந்தப் பாடல் வெளியாகத் தாமதமானது. இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து பாடகி மானசி பாடியுள்ளார்.

லிரிக் வீடியோவாக ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பாடல் வெளியான சில தினங்களிலேயே சில மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்த சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே படத்தில் நடிகர் சிம்புவும் விஜய்க்காக ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில், சிம்பு பாடும் பாடல்கள் அனைத்தும் வெற்றிப் பாடல்களாக அமைந்துவரும் நிலையில் விஜய்க்காக சிம்பு பாடவுள்ளது கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு அதகளக்கொண்டாட்டமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Updated On: 25 Nov 2022 1:16 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...