/* */

குழந்தை ரூபத்தில் சுந்தரிக்கு வந்த ஆபத்து! கடைசியில் டிவிஸ்ட்! எதிர்பார்க்காத திருப்பம்!

கைக்குழந்தையைத் திருடிக் கொண்டு ஒருத்தி சுந்தரியிடம் கொடுத்துவிட்டு போக, இதனால் சுந்தரிக்கு பாதிப்பு ஏற்படும் என நினைக்கும்போது கடைசியில் டிவிஸ்ட் வந்து சேருகிறது.

HIGHLIGHTS

குழந்தை ரூபத்தில் சுந்தரிக்கு வந்த ஆபத்து! கடைசியில் டிவிஸ்ட்! எதிர்பார்க்காத திருப்பம்!
X

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 9th June 2023

சுந்தரியிடம் கிடைத்த கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கு செல்கிறாள் சுந்தரி. அங்கு பெண் காவலர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். அந்த நேரத்தில் குழந்தை பசியால் அழுகிறது. இதனை மனம் ஏற்காமல் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு குழந்தையை எடுத்துச் சென்று நேரம் கழித்து போலிசிடம் தர நினைக்கிறார் சுந்தரி.

ஆட்டோ காரர் ஒருவரிடம் நடந்ததைக் கூறி குழந்தையையும் தன்னையும் தான் தங்கியிருக்கும் வீட்டில் இறக்கி விட்டுவிடும்படி கேட்கிறார். ஆனால் போலீஸ் விசயம், இந்த குழந்தை கடத்தப்பட்ட குழந்தை என்று கூறி ஆட்டோகாரர் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுக்கிறார். தான் பிள்ளைக்குட்டி காரன் எனவும் தனக்கு போலீஸால் பிரச்னை வந்துவிடக் கூடாது எனவும் பயப்படுகிறார் ஆட்டோ காரர்.

சுந்தரியும் தான் நடந்தே செல்வதாக கூற, கொஞ்சம் யோசித்துவிட்டு மனசு கேட்காமல் தானே கொண்டு போய் விடுவதாக கூறி அங்கு கொண்டு சென்று விடுகிறார் ஆட்டோகாரர். பின் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் கணவன் மனைவி இருவரும் வருகிறார்கள். இவர்கள் சமையலுக்கு உதவி செய்வார்கள் என்று தனது மனைவியையும் அறிமுகப்படுத்திவிட்டு உள்ளே செல்ல, சற்று நேரத்தில் போலீஸ் வருகிறது.

குழந்தையைத் தேடி போலீஸும், குழந்தையின் பாட்டியும் வருகிறார்கள். பாட்டி பரிதவித்துக் கொண்டு தன் பேரனைக் காண வருகிறாள். அழுது புலம்பி தன் பேரனை தன்னிடம் காட்டுங்கள். தன் குல விளக்கு, தங்கள் குடும்ப வாரிசு என அழுதுகொண்டே குழந்தையைக் கடத்திட்டு போனவ நல்லா இருக்க மாட்டா என சாபமிடுகிறாள். அடுத்து போலீஸும் சமாதானப்படுத்தி குழந்தையை எடுத்துச் செல்கின்றனர். பாட்டியும் சுந்திரிக்கு நன்றி தெரிவித்து விட்டு செல்கிறாள். போலீஸ் இவர் ஐஏஎஸ் தேர்வு எழுத வந்திருப்பதை அறிந்து பாராட்டிவிட்டு செல்கிறார்.

உள்ளே சென்று அமர்ந்த சுந்தரியிடம் சாப்பிட என்ன செய்ய நான் வெஜ்ஜா, வெஜ்ஜா என்று கேட்கிறார் அந்த அண்ணன். அந்த நேரத்தில் சுந்தரிக்கு ஒரு சிந்தனை வருகிறது. அது குழந்தையைப் பற்றியது. குழந்தை பெண் குழந்தை என்பதை உணர்ந்த சுந்தரி, வந்த பாட்டி அது ஆண்குழந்தை என ஒப்பாறி வைத்தாரே என்பது தொடங்குது சந்தோகம். டுவிஸ்ட்டு.. அது பெண் குழந்தை. இப்போது போலீசுடன் வந்த பாட்டிதான் குழந்தையைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள்.

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 8th June 2023


சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 10th June 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Updated On: 9 Jun 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!