/* */

Pathu thala ஏ ஆர் அமீன் பாடிய நினைவிருக்கா பாடல் !

பத்து தல படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடலை ஏ ஆர் ரஹ்மானின் மகன் ஏ ஆர் அமீன் பாடியுள்ளார். நினைவிருக்கா என துவங்கி நம்மை உள்ளுக்குள் இழுத்து விடுகிறது பாடல்.

HIGHLIGHTS

Pathu thala ஏ ஆர் அமீன் பாடிய நினைவிருக்கா பாடல் !
X

ஏ ஆர் ரஹ்மான் இசையில் அவரது மகன் அமின் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடி உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. கன்னட மொழிப் படமான மஃப்டி படத்தின் ரீமேக் தான் பத்து தல. இதில் ஷிவராஜ்குமார் நடித்த கெத்தான ரோலில் சிம்பு நடித்துள்ளார். அவருக்கு கூடுதல் காட்சிகள் கொடுக்கப்பட்டு படம் சிம்புவுக்கும் கவுதம் கார்த்திக்கிற்கும் இடையிலான மோதல் போல என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் மஃப்டி படத்தில் இப்படி இருக்காது என்கின்றனர்.

சிம்பு, கவுதம் கார்த்திக் தவிர இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திலிருந்து முதலில் வெளியான பாடல் நம்ம சத்தம். ஏ ஆர் ரஹ்மான் குரலில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் தற்போது இந்த பாடல் சத்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.


பத்து தல பாடல் வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கும் என்றும் கூறப்படுகிறது. வரும் 18ம் தேதி இந்த ஆடியோ லாஞ்ச் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அவர் யார் என்பதை கொஞ்சம் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

நினைவிருக்கா பாடல் வரிகளைக் காண்போம்!



நினைவிருக்கா அழகே நாம்

பறந்திருந்தோம் பறந்திருந்தோம்

அடியே நாம்

பறந்திருந்தோம் மறந்திருந்தோம்

அழகே நாம்

மறப்போமா மறப்போமா

மறுப்போமா… மறுப்போமா…

நாட்களை நாம்

நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் நிழலடிக்க

வெடிவெடிக்க

அந்த வானம் பூமி ஆனாலும்

நம் காதல் தூங்காதே

இந்த பூமி பாலை ஆனாலும்

நம் பாடல் ஓயாதே

நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் நிழலடிக்க

வெடிவெடிக்க

மறப்போமா மறப்போமா

மறுப்போமா… மறுப்போமா…

நாட்களை நாம்

குழலோடு கேட்காதே

காற்றில் பேசும் வார்த்தையை

அலையோடு கேட்காதே


நீ போகும் தூரத்தை

இவனோடு கேட்காத

இவன் வாழும் நீளத்தை

நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் எதிர்களிக்க

வெடிவெடிக்க

அட கிருக்கா அட கிருக்கா

நீ சிறை பிடிக்க

நான் சிறகடிக்க

நினைவிருக்கா

நினைவிருக்கா

நினைவிருக்கா

நான் தூங்கப் போன மீனில்லை

நீ தூண்டில் போடாதே

அந்த கால மாற்றம் மாறாதே

நீ காற்றில் ஏறாதே

ஓஹோ…

இன்னொரு நெஞ்சம் எனக்கில்லை

உன்னிரு கண்களில் கனவில்லை

அஞ்சவும் கெஞ்சவும் மனில்லையே

ஓஹோ…

பின்னிய காலங்கள் கணக்கில்லை

தன்னிரு கோலந்து எனக்கில்லை

நம் காதல் தோட்டதில் மலர் இல்லையே

ஓஓ…

நம் காதல் தோட்டதில் மலர் இல்லையே

Updated On: 14 March 2023 4:05 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை