/* */

கார்த்தி நடித்த 'ஜப்பான்', வரும் ஜூன் மாதம் ரிலீஸ்

karthi japan movie release date- நடிகர் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ படம், வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்படுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

கார்த்தி நடித்த ஜப்பான், வரும் ஜூன் மாதம் ரிலீஸ்
X

karthi japan movie release date- ‘ஜப்பான்’ படத்தில் வித்யாசமான கெட் - அப்புகளில் நடிகர் கார்த்தி.

karthi japan movie release date, Japan Tamil Movie Release release date-வித்தியாசமான கெட்-அப்பில், நடிகர் கார்த்தி நடித்த 'ஜப்பான்' படம், வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கார்த்தியின் 25வது படமான, இப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் அமீர் இயக்கிய ' பருத்தி வீரன்' திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி; கிராமத்து கதையம்சம் கொண்ட அந்தப்படத்தில், கார்த்தி வெளிப்படுத்திய நடிப்பு அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றது. அதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய 'பையா' செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' என படத்திற்கு படம் வெவ்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இந்த இரண்டு படங்களுமே கார்த்திக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.


அதனை தொடர்ந்து அதே பாணியை பின்பற்றிய கார்த்தி, 'நான் மகான் அல்ல' 'சிறுத்தை' 'சகுனி' 'பிரியாணி' 'மெட்ராஸ்' 'கொம்பன்' 'தோழா' 'தீரன் அதிகாரம் ஒன்று' 'கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார்.

கடந்த ஆண்டு மட்டும் கார்த்தியின் நடிப்பில், 'விருமன்' ' பொன்னியின் செல்வன்' 'சர்தார்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. தற்போது 'குக்கூ', 'ஜோக்கர்' 'ஜிப்ஸி' ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாக்கி வருகிறது.


'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின், ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரவுடி கெட்டப்பில் கார்த்தி கோபமாக நிற்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது. அதே போல், சோபாவில் அவர் படுத்திருப்பது போன்ற காட்சியும் டிரெண்டிங் ஆனது.


ராஜூ முருகன் இயக்கிய 'குக்கூ' மற்றும் 'ஜோக்கர்' ஆகிய இரண்டு படங்களும், மிகச்சிறந்த படங்களாக ரசிகர்களால் பேசப்பட்டது. கண்பார்வையற்ற காதல் ஜோடியின் உணர்வுகளை, தத்ரூபமாக வெளிப்படுத்திய 'குக்கூ' படம், சமூக அவலங்களை அப்பட்டமாக வெளிப்படுத்திய 'ஜோக்கர்' படமும், இயக்குநரின் தனித்திறமையை பறைசாற்றியது. கார்த்தியின் நடிப்பை, இன்னும் மெருகேற்றிய வகையில், 'ஜப்பான்' படம், அவரது சினிமா பயணத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இன்னும் நான்கு மாதங்கள் கால அவகாசம் உள்ள நிலையில், 'ஜப்பான்' படம், ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இது, கார்த்தியின் 25வது படம் என்பதால், இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றதாக, கவனிக்கதக்கதாக உள்ளது.

Updated On: 27 Jan 2023 8:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  4. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  5. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  6. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  7. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  8. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  9. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  10. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...