கப்ஜா திரைவிமர்சனம்

உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள படம்தான் கப்ஜா. இந்த படத்தின் திரை விமர்சனத்தைப் பார்க்கலாம்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கப்ஜா திரைவிமர்சனம்
X

அஜித், விஜய், சூர்யா மூவரும் இணைந்து ஒரே படத்தில் நடித்தால் எப்படி இருக்கும், கிட்டத்தட்ட அதே கதைதான் இந்த கப்ஜா படத்தில் நடந்திருக்கிறது. கன்னடத்தின் முன்னணி நடிகர்களான உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள படம்தான் கப்ஜா. இந்த படத்தின் நாயகன் உபேந்திரா.

படத்தை திரையரங்கு சென்று பார்த்து ஏமாற்றமடைந்து பலர் வந்திருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். கன்னட மொழியிலேயே இந்த படத்தை பெரிய வரவேற்பெல்லாம் இல்லை. சாதாரண படமாகவே வெளியாகியிருக்கிறது.கதைச் சுருக்கம்

ஒரு ஏரியாவைப் பிடிக்க இரண்டு உள்ளூர் டான்கள் பெரும் சண்டைகளைப் போட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏரியாவை உபேந்திரா அசால்ட்டாக உள்ளே புகுந்து பிடித்துவிடுகிறார். அந்த இடம் உபேந்திரா கண்ட்ரோலில் இருக்கிறது. அதனை முறியடிக்க லோக்கல் முதல் இண்டர்நேஷனல் டான்கள் வரை சண்டைப் போடுகிறார்கள். உபேந்திராவுடன் மோதி ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.விமர்சனம்

பொதுவாக படத்தைப் பற்றிய நல்ல விசயங்களைக் கூறிவிட்டு பின்னர் நெகடிவ்வான சரியாக ஒர்க்கவுட் ஆகாத விசயங்களைப் பற்றி பேசுவது வழக்கம். ஆனால் இந்த படத்தில் நாம் நெகடிவ்வான சரியாக ஓர்க்கவுட் ஆகாத விசயங்களைப் பார்க்கலாம்.

கேஜிஎஃப் மாதிரியான ஃபீல் தரவேண்டும் என்று கூறிவிட்டு உண்மையிலேயே இது கேஜிஎஃப் படத்தை இரண்டாவது முறையாக பார்ப்பது போல தந்துவிட்டார்கள். ஆனால் கதையும் சரியில்லை திரைக்கதையும் எடுபடவில்லை.

இசை, எடிட்டிங் கூட கேஜிஎஃப் படத்தைப் பார்த்து அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்.

வில்லன்களை அறிமுகப்படுத்தும்போது மாஸாக காட்ட வேண்டும் என்று நினைத்து காட்டிவிட்டு அவர்களை எலியைக் கொல்வது போல அசால்ட்டாக கொல்வது நம்பும்படியாக இல்லை. இதனால் கதாநாயகன் மீது நமக்கு நம்பிக்கை வரவில்லை. ஏதோ வீடியோ விளையாடுவது போல படம் முழுக்க தோன்றுகிறது.


பின்னணி இசை மாஸாக வரவேண்டும் என கேஜிஎஃப் படத்தைப் பார்த்து அப்படியே கண்ட்ரோல் சி கண்ட்ரோல் பி அமுக்கி தனது வேலையை எளிதாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர். பாடல்கள் ஒன்று கூட கேட்கும்படியாக இல்லை.

திரையரங்கிலிருந்து வெளியேறி வந்து சற்று நேரம் காதுகளுக்கு ஆசுவாசப்படுத்த நேரம் கொடுத்ததற்கு திரையரங்குக்கு நன்றி. அதுக்காக பப்ஸ் எல்லாம் வாங்க முடியாது. இந்த படத்துக்கு வந்ததே பெரிய விசயம் என டிவிட்டரில் சிலர் கலாய்த்து போஸ்ட் செய்து வருகின்றனர்.

இயக்குநரிடம் பேச்சாற்றல் மிகச் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர், உபேந்திரா, மற்ற கலைஞர்களுக்கு கதை சொல்லியே நம்ப வைத்திருக்கிறாரே. பரவாயில்லை இயக்குநரே கொஞ்சம் மெனக்கெட்டு இன்னும் நல்ல கதையாக பிடித்து சிறப்பாக படம் செய்யுங்கள். வாழ்த்துகள்.

Updated On: 18 March 2023 11:20 AM GMT

Related News

Latest News

 1. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 2. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 3. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 5. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
 6. சோழவந்தான்
  மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
 7. உலகம்
  ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
 8. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
 9. திருச்செந்தூர்
  மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
 10. மேலூர்
  மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்