/* */

Ethirneechal எகிறும் நந்தினி... எரிந்து விழும் ஜனனி! ஷாக் ஆன குணசேகரன்!

Ethir Neechal Today Episode-குணசேகரன் வீட்டுக்கு வரும் கரிகாலன், ஆதிரை. ஆரத்தி எடுக்கும்போதே வரும் பிரச்னை!

HIGHLIGHTS

Ethirneechal எகிறும் நந்தினி... எரிந்து விழும் ஜனனி! ஷாக் ஆன குணசேகரன்!
X

Ethirneechal கலாய்த்து ஓட விடும் பெண்கள்! குணசேகரன் செய்யப்போகும் அடுத்த அதிரடி!

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் 3 ஜூலை 2023 | Ethirneechal Today Episode 3rd July 2023

Ethir Neechal Today Episode-ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வந்த பிறகு, கரிகாலனையும் ஆதிரையையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறார்கள். ஆதிரையை அவள் வீட்டுக்கே சென்று அழைத்து வர சக்தியுடன், ஜனனி, நந்தினி ஆகியோரும் வருகின்றனர். ஜான்சி ராணி தனது அடாவடித்தனத்தை அங்கேயும் காண்பிக்கிறார். உள்ளே ஜனனி, நந்தினி, ஆதிரை பேசிக் கொண்டிருக்கையில் ஜான்சி ராணி கதவை தட்டி அடிதடி செய்கிறாள். கல்யாண மண்டபத்தில் பொண்ண கடத்திட்டு போனவ இவதான் என நந்தினியை காண்பிக்கிறாள்.

அதற்கு நந்தினி தக்க பதிலடி கொடுக்கவே, அடுத்து ஆதிரையைச் சமைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறாள் ஜான்சி ராணி. கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா அடுப்படில போயி காபியாச்சும் போட வேண்டாமா என கோபப்படுகிறாள். இதனால் ஆதிரை தாலியைத் தூக்கி காண்பித்து சமைக்கணுமா சமைக்கணுமா என கொந்தளிக்கிறாள். இதனால் பதறிப் போன கரிகாலன் வேண்டாம் தாலிய கழட்டிறாத என்று சொல்ல, ஜான்சி ராணி அமைதியாக நிற்கிறாள். நான் என் வீட்டுக்கு போகணும் என்று சொல்ல, கரிகாலன் கூட்டிப் போவதாக சொல்லி சமாதானம் செய்கிறான்.

மறுவீட்டுக்கு செல்லும் கரிகாலனையும் ஆதிரையையும் நிற்க சொல்லி, ஜான்சி ராணி ஒவ்வொரு வீடாக என் புள்ள மறுவீடு போறான் என சொல்லிக் கொண்டே நடந்து வருகிறார்கள். பின்னாடி ஜனனியும் சக்தியும் நடந்து வர, நந்தினியின் கையைப் பிடித்துக் கொண்டே ஆதிரையும் அம்மாவுடன் பேசிக் கொண்டே கரிகாலனும் நடந்து வருகிறார்கள். ஜான்சி ராணி கரிகாலனைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பிக்கிறாள்.

குணசேகரன் வீட்டில் ரேணுகாவும் குணசேகரனும் வார்த்தை விளையாட்டில் மோதிக் கொள்கிறார்கள். பாத்தியா ஞானம் உன் பொண்டாட்டியோட பதில என சொல்கிறான். ஞானசேகரன் கோபத்தில் அவளை முறைக்கிறான்.

குணசேகரன் வீட்டுக்கு வருகிறார்கள். ஆதிரை வேகமாக உள்ளே செல்ல முயற்சிக்க, குணசேகரன் அவளைத் தடுத்து நிறுத்துகிறார். உடனே ஆரத்தி தட்டு எங்கே கரைக்கச் சொன்னேன்ல என ரேணுகாவை முறைக்கிறான். நான் மளிக லிஸ்ட் எடுத்து பாத்துட்டு இருந்தேன் என்கிறாள். முதன்முதலா நீ கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்தப்ப உனக்கு ஆரத்தி எடுத்தோம்ல மறந்து போச்சா என்று கேட்க, அதற்கு பதிலளித்த ரேணுகா ரொம்ப நாள் ஆச்சுல்ல மறந்துடுச்சி என்கிறாள்.

அந்த நேரத்தில் ஆட்டோவில் ரேணுகாவின் மகளை அழைத்து வருகிறார்கள். அவருடைய ஆசிரியரும் அவள் வயசுக்கு வந்துவிட்டாள் சொல்லாமலே இருந்திருக்கிறாள் என்று கூறுகிறார். மூன்று நாட்களாக சொல்லாமல் இருந்திருக்கிறாள். உங்கள் வீட்டில் எதும் பிரச்னையா என்ன ஆச்சுன்னு போயி கூப்பிட்டு பேசுங்க.

ஐஸ்வர்யா ரொம்ப நல்ல பொண்ணு பிரிலியன்டான பொண்ணு எல்லா எக்ஸாம்லயும் நல்ல மார்க் எடுப்பா என சொல்லிட்டு போகிறார். இதனால் அங்கு ரேணுகாவும் நந்தினியும் ஐஸ்வர்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் குணசேகரன் ஏம்மா அழறீங்க. நல்ல விசயம்தான நடந்திருக்கு கூட்டிட்டு உள்ள போங்கம்மா என்கிறான். அதற்குள் ஞானத்துக்கும் ரேணுகாவுக்கும் சண்டை வருகிறது. தாங்கள் என்னன்ன வேலைகள்லாம் செய்றோம் நீங்க சும்மா வந்து சாப்பிட்டுட்டு போயிடுறீங்க என்று அவளின் வலியை உணர்த்தி கத்தி பேசுகிறாள். பின் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடுகிறார்கள்.

கரிகாலன் ஆரத்திக்காக காத்திருந்து பின் குணசேகரனிடம் கேட்க, அட போடா நீ வேற இங்க என்ன விசயம் நடந்திருக்கு, நீ ஆரத்திக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க, வாப்பா எனக்கு ஆரத்தி எடுக்க தெரியாது, வலது காலோ இடது காலோ ரெண்டும் நம்ம கார்தான உள்ள வா என்று செல்கிறான் குணசேகரன்.

மேலே ரேணுகா அழுதுகொண்டிருக்கிறாள். அம்மாகிட்ட சொல்ல முடியாத அளவுக்கு என்ன பிரச்னை என்று ஐஸ்வர்யாவைக் கேட்கிறாள். அப்போது மிகவும் பக்குவமாக ஐஸ்வர்யா பதில் சொல்கிறாள். நான் வயசுக்கு வந்துட்டத சொல்லிட்டா மட்டும் இவங்க என்ன செய்ய போறாங்க. என்ன ஒரு ரூமுக்குள்ள அடச்சி வச்சி, சொந்த காரங்கள கூட்டு விருந்து வச்சி, அப்றம் கீழ உக்காந்து இருக்கான்ல ஒரு லூசு, அவன மாதிரி ஒருத்தன கூட்டி வந்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இதல்லாம் பிடிக்கலன்னு சொன்னா அப்பா பெரியப்பாகிட்ட தயங்கி தயங்கி சொல்வாரு, அதுக்குள்ள பெரியப்பா இது என் வீடு என் சொத்துனு சொல்ல, அப்றம் அப்பாவும் அவரு கால்ல விழுந்துடுவாரு. இதான் நடக்கப் போகுது என்று கூறுகிறாள் ஐஸ்வர்யா.

அதற்கு தாங்கள் உனக்கு துணையாக இருப்போம் ஐஸ்வர்யா என ஜனனி சொல்கிறாள். அதேநேரம் இந்த வீட்டில் எல்லாரும் எல்லாத்தையும் போராடி போராடிதான் பண்ணனும். ஆதிரை அத்தை விசயத்துலயே தெரிஞ்சி போச்சு. இங்க பொம்பள புள்ளையா பொறந்துட்டாளே லைஃப் காலி. எங்க லைஃபோட அத்தன ரைட்ஸையும் அவரே எடுத்துக்குறாரு. என் கிளாஸ்ல படிக்குற ரேஷ்மா, திவ்யானு எல்லாரும் ஏஜ் அட்டண்ட் பண்ணிட்டாங்க. அவங்க யாரும் வீட்ல இத சொல்லிட்டாங்க. யாருமே பெருசா எடுத்துக்கல. அடுத்தநாளே சாதாரணமா ஸ்கூலுக்கு வந்துட்டாங்க.

நீங்க தர்ஷினிகிட்ட என்ன சொன்னீங்க சித்தி, இது பாடில நடக்குற ஒரு ஹார்மோனல் சேஞ்ச். சாதாரணமா எல்லா பொண்ணுங்களுக்கும் உடம்புல வர்ற விசயத்த வச்சி இவங்க ஸ்டேட்டஸ் கேம் ஆடிட்டு இருக்காங்க. பெரியப்பா காசுல இந்த ஃபங்ஷன் நம்ம நடத்தணுமாம்மா என்று கூறுகிறாள். என்னையும் உங்கள மாதிரி ஆக்குறதுக்கான பர்ஸட் ஸ்டெப் தான்மா இந்த பங்ஷன் என்று கூறுகிறாள்.

சித்தி என் ஃப்ரண்ட்ஸோட அப்பா, அம்மா எல்லாம் அவங்க கொழந்தைங்கள உக்கார வச்சி, உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன வேணும்னு கேப்பாங்க சித்தி, இதுமாதிரி நம்ம வீட்ல எப்பவாச்சும் ஹெல்த்தி கான்வர்சேசன் நடந்துருக்கா சித்தி என்று ஐஸ்வர்யா கேட்க அனைவரும் இல்லை என தலையாட்டுகிறார்கள். அதை படிக்கட்டிலிருந்து ஞானசேகரன் கேட்டு வருத்தப்படுகிறான்.

படிக்காத அப்பாக்கள்லாம் நாமதான் படிக்கல நம்ம புள்ளைங்களாச்சும் படிக்கட்டும் என நினைப்பாங்க. ஆனா நம்ம வீட்ல இவங்கள்லாம் வேற டைப்பு என்று சொல்லும்போது கோபப்பட்டு ஞானசேகரன் ஐஸ்வர்யாவைத் திட்டுகிறான். இவ்ளோ நாள் சொல்லாம எங்க கூட எல்லாம் புழங்கிட்டு இருக்க இது ரொம்ப தப்பு என தீட்டு பற்றி பேச கொதித்தெழுகிறாள் ரேணுகா. ரேணுகாவும் ஞானசேகரனை வாய்க்கு வந்தபடி பேசுகிறாள். ஆனால் அவள் கேட்பதில் நியாயம் இருக்கிறது.

அந்த நேரத்தில் குணசேகரன் மேலே வருகிறான், குழந்தைக்கு நல்லதை சொல்லிக் கொடுங்க. அதவுட்டுட்டு புள்ளைங்கள கெடுக்காதீங்க. எம்மா நீ இவங்க பேச்செல்லாம் கேட்டுட்டு தப்பு தப்பா யோசிக்காத என ஐஸ்வர்யாவிடம் சொல்ல, இல்ல பெரியப்பா எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கல. நா உங்ககிட்ட இருந்துதான் கத்துகிட்டேன். யாருகிட்ட எப்படி நடந்துக்க கூடாது. யாரை எப்படி நடத்தக்கூடாதுனு எல்லாத்தையும் உங்க கிட்டதான் கத்துக்கிட்டேன் என்கிறாள். தனக்கு எதிராக குழந்தைகளும் பேச ஆரம்பிக்குதே என குணசேகரன் யோசிக்கிறான்.

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் 1 ஜூலை 2023 | Ethirneechal Today Episode 1st July 2023

குணசேகரன் வீட்டு குழந்தைகள் அனைவரும் முன் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு அவர்களது அப்பத்தாவான விசாலாட்சிக்கு ஆறுதல் கூறுகிறார்கள். நந்தினியின் மகள் தான் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆதிரை அத்தையைப் பார்த்துவிட்டு வருவதாக கூறுகிறாள். ஆனால் அங்கு செல்லவே முடியாது அது ஒரு குட்டி தெரு அங்கெல்லாம் போக முடியாதுன்னு கதிர் சித்தப்பா சொன்னாரு என குணசேகரனின் மகன் கூறுகிறான்.

குணசேகரன் அந்த நேரத்தில் அங்கு வருகிறான். தனது கடைசி தம்பி சக்தியை திரும்ப வீட்டுக்கு வரச் சொல்ல சொல்லுமாறு தன் தாயிடம் கேட்கிறான். என்ன பாக்ற, நான் தான் வெளியில் விரட்டினேன். ஆனா பெத்த புள்ள மாதிரி வளத்துட்டேன். இப்ப வெளிய விரட்டி விட்டது கஷ்டமாக இருக்கிறது என்கிறான்.

எனக்கும் அவன புடிக்காதுதான்மா. அவன் கண்ணுமுன்னாடியே இருந்தான்னு கவல இல்லாம இருந்தேன். இப்ப தனியா போயி என்ன கஷ்டப்பட போறானோனு இருக்கு. வரச் சொல்லுமா என்றதும் விசாலாட்சி அவன உன் காலடில போட பாக்காத. அவன் போகட்டும் தனியா நின்னு வாழட்டும் என்கிறார். வேணாம் சாமி நீ யாருக்காகவும் பதறாத. இருக்குற நாங்க தலையாட்டு பொம்மையா இருந்துட்டு போறோம். அவன் சொந்தமா பொழச்சிக்கிட்டும்.

அதற்கு குணசேகரன் தான் கோபத்தில் பேசிவிட்டதாகவும், உங்க எல்லார் மேலையும் எனக்கு எவ்ளோ பாசம் இருக்குன்னு தெரியாது என்கிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் ஈஸ்வரி, தம்பி மேல திடீர்னு பாசம் வந்துச்சோ. இது என்ன நாடகம் என்கிறாள். தயவு செய்து அவனை விட்ருங்க. அவன் தானா வாழட்டும் அவன தொந்தரவு செய்யாதீங்க என்கிறாள்.

குணசேகரன் சக்தியை ஜனனி காசுக்காக பயன்படுத்துகிறாள். அவனை பயன்படுத்திவிட்டு பிச்சைக்காரனாக ஆக்கிவிடுவாள் என்பது போல பேசுகிறான். சக்தி வரட்டும் அவன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறேன் சரியாம்மா என்று விசாலாட்சி கால்ல விழப் போக, அவள் வேண்டாம் என்கிறாள். சக்தி மேல பாசம் வைத்ததால்தான் என் சொந்த புள்ளையவே நான் பாசம் காட்டி வளக்கல என்று கூறுகிறான்.

அந்த நேரத்தில் கதிர் கோபப்பட உனக்கு புரியாது என்று கூறி அவனை எரிச்சலூட்டுகிறான். இந்நிலையில் தனது நாடகத்தை மேலும் சீரியஸாக அரங்கேற்றுகிறான் குணசேகரன். வரச் சொல்லுமா என கெஞ்சி கேட்க, விசாலாட்சி அவனது நாடகத்தை நம்பால் இருக்கிறார். எனக்கு ஃபோன்லாம் பண்ணத் தெரியாது என்கிறான் குணசேகரன். மேலும் அவன் ஞானசேகரனை சக்திக்கு ஃபோன் போடச் சொல்லி, கேட்க, விசாலாட்சி சக்தியிடம் கெஞ்சுகிறாள். ஆனா சக்தி தான் வரமாட்டேன் என்றதும், விசாலாட்சி அழ ஆரம்பிக்கிறாள். வாய்யா சக்தி என ரொம்பவும் இரங்கி பேச சக்தி வேறு வழியில்லாமல் ஜனனியையும் அழைத்துச் செல்கிறான்.

குணசேகரன் தான் இந்த குடும்பத்துக்காக உழைக்கிறேன் என்று கூறி அம்மாவுக்கு வணக்கத்தைப் போட்டுவிட்டு தான் மேலே இருக்கிறேன். தம்பி வந்தா வரச் சொல்லு என்று கூறிவிட்டு செல்கிறான். விசாலாட்சியும் ஈஸ்வரியும் தனியே பேசிக்கொள்கிறார்கள். அப்போது அத்தை ஏன் அவனை வர சொன்னீங்க என்று கேட்க, வரட்டும் ஈஸ்வரி, அவன வர சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு என்கிறார் விசாலாட்சி.

சக்தியும் ஜனனியும் ஆட்டோவில் வீட்டுக்கு வருகிறார்கள். வாசலில் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி மூவரும் அவர்களை பார்த்து நிற்கிறார்கள். அப்போது நந்தினி கொஞ்சம் கோபத்துடன் சக்தியை ஏன் வந்த நீ என்று கேட்க, சக்தி பதில் கூற முடியாமல் தவித்து நிற்கிறான். உங்க அண்ணன் ஞானசேகரன கேட்டியே மானம் இருக்கான்னு உனக்கு மானம் இருக்கா அம்மா பாசத்துல ஓடி வந்துட்டியா அம்மா கூப்பிட்டதும் வந்துட்டியே இது நாடகம் கடைசில உங்க அண்ணன் தான் ஜெயிக்க போறாரு என்று பேசிக் கொண்டிருக்கும்போதே மேலே மாடியில் குணசேகரனும், கீழே முற்றத்தில் கதிரும் ஒரே நேரத்தில் வருகிறார்கள்.

கதிர் அவர்கள் இருவரையும் காக்கா சோத்து வந்து நிற்கிறது என அவமானப்படுத்துகிறான். அந்த நேரத்தில் நந்தினியையும் திட்டுகிறான். ஆனால் குணசேகரன் சக்தியை உள்ளே வா என்று அழைக்கிறார். சக்தியும் ஜனனியும் உள்ளே செல்கையில், நந்தினி குணசேகரன் வாங்க, நா பேசுனதெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க என நாடகம் போடுவார் என்று கூறுகிறாள்.

சக்தியையும் ஜனனியையும் பார்த்த குணசேகரன் மேலே இருந்து இறங்கி வருகிறான். எதிர்பார்த்தபடியே வா சக்தி உனக்காகத்தான் காத்திருந்தேன். கோபத்தில் சில வார்த்தைகளை விட்டுட்டேன். அதெல்லாம் மனசுல இருந்து பேசல என சொல்லவும், நீங்க கூப்பிட்டதுக்காகலாம் நான் இங்க வரல, அம்மா கூப்பிட்டதாலதான் வந்தேன் என்று கூறுகிறான் சக்தி. இதனால் சக்திக்கும் கதிருக்கும் இடையில் மோதல் வருகிறது. மீண்டும் குணசேகரன் தலையிட்டு சண்டையை நிறுத்துகிறான். கதிரை சமாதானப்படுத்தி கொஞ்ச நேரம் பேசாம நில்லுங்க என்கிறார்.

இதற்கிடையில் நந்தினியும் ரேணுகாவும் குணசேகரனையும் ஞானசேகரனையும் வெளுத்து வாங்குகின்றனர். குணசேகரன் ரேணுகாவை பார்த்து என்ன ஞானசேகரன பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்கிறான். அண்ணனை சொன்னதும் ஞானசேகரனுக்கு கோபம் தலைக்கு மேல் வருகிறது. தான் அண்ணனை கஷ்டப்பட்ட காலத்துல இருந்து பாத்தவன் நான், சக்தி குழந்தை, கதிருக்கு இதுலாம் நினைவுலே இருக்காது. ஆனா நான் கூட இருந்தேன்.

இதனைத் தொடர்ந்து சக்தி, ஞானசேகரனிடம் அண்ணே இது அவரோட கடமைனே. அவரு மூத்தவரா பொறந்ததால இப்படி பண்ணாரு. நான் மூத்தவனா இருந்தா நானும் இததான் பண்ணிருப்பேன். அதுக்காக கடைசி வரைக்கும் நான் பண்ணேன் நான் பண்ணேன்னு சொல்லி அடிமைப் படுத்திட்டு இருக்கக் கூடாது இல்லையா என்கிறான்.

கோபத்தில் கொந்தளித்த சக்தியை சொத்தை பிரிச்சி தரேன் கொண்டு போ என்கிறான் குணசேகரன். நாலு பங்கா போட்டு எல்லாருக்கும் பிரிச்சிடுவோம்னு சொல்ல, அதற்கு சக்தி தனக்கு ஒரு பைசா வேண்டாம். நான் அம்மாக்காக வந்தேன். இந்து சொத்து நீங்க சம்பாதிச்சது நீங்க உழச்சி சம்பாதிச்ச சொத்து எனக்கு வேண்டாம். நான் என் சொந்த கால்ல நிக்கிறேன். தற்குரி பய எப்படி சாதிக்குறான்னு பாருங்க என டயலாக் பேசுகிறான் சக்தி.

தான் அந்த குட்டி வீட்டில் தங்கிக் கொள்கிறேன் வாடகை கொடுக்கிறேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி வருத்தப்படுகிறாள். இந்த சொத்துல உன் பங்கும் இருக்கு. எல்லா வெற்றியும் நீ சேர்ந்து செய்த உழைப்பால கிடச்சதுதான் என ஈஸ்வரி சொல்ல, நந்தினி நம்ம எல்லாருக்கும் பங்கு இருக்கு என்று கூறுகிறாள். உடனே கதிர் கோபத்தில் அவளைத் திட்டுகிறான். உனக்குலாம் சங்குதான் என்கிறான். உடனே சோத்துக்கு எங்க போவ, சாப்பிட இங்கதான வரணும் என்பது போல பேசுகிறாள்.

கதிர் நந்தினியையும் ஞானம் ரேணுகாவையும் மேல வா என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள். அடுத்து ஜனனி என்ன செய்யப் போகிறார் என்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Feb 2024 3:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?