/* */

ஜோதிடத்தில் நட்சத்திர பாதம் என்றால் என்ன..? உங்கள் ஜென்ம ராசி எது? தெரிஞ்சுக்கங்க..!

Tamil Stars And Rasi-ஜாதகத்தில் ராசியை கணித்து எழுதுவதற்கு நட்சத்திரங்களே அடிப்படை ஆகும். வாங்க எப்டீன்னு பார்க்கலாம்.

HIGHLIGHTS

ஜோதிடத்தில் நட்சத்திர பாதம் என்றால் என்ன..? உங்கள் ஜென்ம ராசி எது? தெரிஞ்சுக்கங்க..!
X

27 stars in tamil-நட்சத்திரங்கள் (கோப்பு படம்)

Tamil Stars And Rasi-ஜோதிடத்தின் அடிப்படை நட்சத்திரங்கள் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் கணிக்கப்படுகிறது.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதாக வருகிறதோ அதுவே அவரது ஜென்ம ராசியாக விளங்கும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. நட்சத்திரங்கள் 27 உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை 1,2,3,4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் அதனடிப்படையில் தனித்தனி குணங்கள் உள்ளன. ஒரே நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் பாதங்கள் மாறும்போது வெவ்வேறு குணங்களைக் கொண்டவையாக இருக்கும். இந்த நட்சத்திரமானது, தன் குணங்களுடன் ராசியின் குணத்தை உள்வாங்கி அதற்கேற்ற பலன்களையும், செயல்களையும் அந்த ராசிக்காரர் மூலமாக வெளிப்படுத்துகின்றன.

நட்சத்திர பாதம் என்பது என்ன?

ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள் ஆகும். ஒளிக்கற்றைகளை நான்கு பாகங்களாக பிரிப்பார்கள். அதனால்தான் ஒவ்வொரு நட்சத்திரதிற்கும் 4 பாதங்கள் வருகின்றன. அதை நாழிகையின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்காகப் பிரித்தால் 15 நிமிடங்கள். ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம் பாதம். அதுபோல பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.

27 நட்சத்திரங்களின் பெயர்கள் வருமாறு:

1. அசுவினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகிணி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம்

9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. அஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம்

18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி

26. உத்திரட்டாதி, 27. ரேவதி

அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் குறி வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி போன்ற உருவங்கள் ஆகும்.

நட்சத்திர இராசி மண்டலம்

ஒரு இராசி மண்டலம் என்பது 360 டிகிரி கொண்டது. ராசி மண்டலத்தில் ஒரு ராசிக்கான கோண அளவு வழங்கப்பட்டு இராசி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கும் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 ராசிகளுக்கும், ஒரு ராசிக்கு 30 டிகிரி என்ற கோண அளவில் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிரப்பட்ட நட்சத்திரங்கள் பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட டிகிரிகள் 12 ராசிகளில் இடம் பெறுமாறு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ராசிக்கு = 30 டிகிரி

ஒரு நட்சத்திரம் = 13 டிகிரி, 20 கலைகள்

60 கலைகள் = 1 டிகிரி


இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள இராசிகளும் அவற்றின் டிகிரிகள் மற்றும் இராசி ஒவ்வொன்றுக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்ட நட்சத்திர பாதங்கள் பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.

1. மேஷ ராசி : 0 to 30 டிகிரி

மேஷ ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

அஸ்வினி : 1,2,3,4 பாதங்கள்

பரணி : 1,2,3,4 பாதங்கள்

கிருத்திகை : 1 பாதம்

2. ரிஷப ராசி : 30 to 60 டிகிரி

ரிஷப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

கிருத்திகை : 2,3,4 பாதங்கள்

ரோகிணி : 1,2,3,4 பாதங்கள்

மிருகசீரிடம் : 1,2 பாதங்கள்

3. மிதுன ராசி : 60 to 90 டிகிரி

மிதுன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

மிருகசீரிடம் : 3,4 பாதங்கள்

திருவாதிரை : 1,2,3,4 பாதங்கள்

புனர்பூசம் : 1,2,3 பாதங்கள்

4. கடக ராசி : 90 to 120 டிகிரி

27 stars in tamil

கடக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

புனர்பூசம் : 4 பாதம்

பூசம் : 1,2,3,4 பாதங்கள்

ஆயில்யம் : 1,2,3,4 பாதங்கள்

5. சிம்ம ராசி : 120 to 150 டிகிரி

சிம்ம ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

மகம் : 1,2,3,4 பாதங்கள்

பூரம் : 1,2,3,4 பாதங்கள்

உத்திரம் : 1 பாதம்

6. கன்னி ராசி : 150 to 180 டிகிரி

கன்னி ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

உத்திரம் : 2,3,4 பாதங்கள்

அஸ்தம் : 1,2,3,4 பாதங்கள்

சித்திரை : 1,2 பாதங்கள்

7. துலாம் ராசி : 180 to 210 டிகிரி

துலாம் ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

சித்திரை : 3,4 பாதங்கள்

சுவாதி : 1,2,3,4 பாதங்கள்

விசாகம் : 1,2,3 பாதங்கள்

8. விருச்சிக ராசி : 210 to 240 டிகிரி

விருச்சிக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

விசாகம் : 4 பாதம்

அனுஷம் : 1,2,3,4 பாதங்கள்

கேட்டை : 1,2,3,4 பாதங்கள்

9. தனுசு ராசி : 240 to 270 டிகிரி

தனுசு ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

மூலம் : 1,2,3,4 பாதங்கள்

பூராடம் : 1,2,3,4 பாதங்கள்

உத்திராடம் : 1 பாதம்

10. மகர ராசி : 270 to 300 டிகிரி

மகர ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

உத்திராடம் : 2,3,4 பாதங்கள்

திருவோணம் : 1,2,3,4 பாதங்கள்

அவிட்டம் : 1,2 பாதங்கள்

11. கும்ப ராசி : 300 to 330 டிகிரி

கும்ப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

அவிட்டம் : 3,4 பாதங்கள்

சதயம் : 1,2,3,4 பாதங்கள்

பூரட்டாதி : 1,2,3 பாதங்கள்

12. மீன ராசி : 330 to 360 டிகிரி

மீன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

பூரட்டாதி : 4 பாதம்

உத்திரட்டாதி : 1,2,3,4 பாதங்கள்

ரேவதி : 1,2,3,4 பாதங்கள்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 9:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்