/* */

சரவண பவன் அண்ணாச்சியாக நடிக்க போவது யார்?

தமிழக மக்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்தவர் சரவண பவன் அண்ணாச்சி ராஜ கோபால்.பலருக்கு ரோல்மாடலாக இருந்தவர்.தென்னிந்திய உணவின் சுவையை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தவர்.

HIGHLIGHTS

சரவண பவன் அண்ணாச்சியாக நடிக்க போவது யார்?
X

சரவண பவன் அண்ணாச்சி

தமிழக மக்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்தவர் சரவண பவன் அண்ணாச்சி ராஜ கோபால் . தமிழகத்தின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தவர். பலருக்கு ரோல்மாடலாக இருந்தவர். அவரது ஊழியர்கள் மட்டுமல்லாது பொது மக்களாலும் கொண்டாடப்பட்டவர். தென்னிந்திய உணவின் சுவையை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தவர்.

அப்படிபட்டவர் தன் வயதில் பாதியே இருந்த ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டதும் அவரை அடைய நினைத்ததும், அதற்காக அவரது கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றத்தில் சிக்கியதும், அதைத் தொடர்ந்து உண்மைகள் வெளிப்பட்டு நடந்த நீதிமன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுமான நாட்டை உலுக்கிய இந்த சம்பவங்கள், உண்மையான ஆதார பின்னணியைக் கொண்டு ஒரு சினிமா உருவாக இருக்கிறது. இந்தக் கதையை அனைத்து மொழிகளிலும் திரைப்படமாக எடுப்பதற்கான உரிமையை ஜீவஜோதியிடம் இருந்து Junglee Pictures தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் Badhaai Ho, Bareilly Ki Barfi, Talvar மற்றும் Raazi, போன்ற படைப்புகளை கொடுத்ததாக்கும்

இப்போ சில தர்ப்பினர் மறந்து போன ஜீவஜோதி வாழ்க்கை கதையை உலகிற்கு சொல்ல சம்மதம் தெரிவிச்ச திருமதி ஜீவஜோதி சாந்தகுமார் இது குறிச்சு, "என்னோட வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உண்ர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, Junglee Pictures திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது.

எனது கதையை பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்" அப்ப்டீன்னார்.

Junglee Pictures நிறுவனம் பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயர் அவர்களை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரமாண்ட வெற்றி பெற்ற "Raazi" படத்திற்கு பிறகு Junglee Pictures அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

இப்படம் குறித்து பவானி ஐயர் பேசும்போது, "இப்படத்திற்காக Junglee Pictures என்னை அணுகி, இக்கதையை கூறியபோது மிகப் பெரிய ஆச்சர்யம் உண்டானது. ஆரம்பத்தில் வாழ்வை முன்னேற்றும் நம்பிக்கைமிக்க கதையாக ஆரம்பித்து தடாலென தடம் மாறி ஒவ்வொரு பெண்ணுக்குமான எச்சரிக்கை கதையாக மாறி நின்றது பெரும் அதிர்ச்சியை தந்தது.

வாழ்வின் மிகச்சிறிய ஒரு தருணம் உங்களை சந்தர்ப்பவாதியாக்கலாம் அல்லது குற்றத்தின் பாதிப்பில் சிக்கிக் கொள்பராகவும் மாற்றலாம். சமூகத்தில் மிகப் பெரும் சக்தி படைத்த ஒருவருக்கெதிராக ஜீவஜோதி பாதிக்கப்பட்டு, அதை எதிர்த்து மிகப் பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அவரின் போராட்டம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த கூடியது. அவரது இந்த போராட்டம் எனக்கு மட்டுமல்ல மொத்த பெண் உலகத்திற்கும் மிகப் பெரும் பாடத்தை கற்று தந்துள்ளது.

இந்தக் கதை ஒரு பக்கம் குற்றத்தின் பிடியில் சிக்கி கொண்டு உயிர் பிழைக்க போராட்டம் நடத்திய கதையையும், இன்னொருபுறம் மிகப் பெரும் பணமும், அதிகாரமும், சக்தியும் எத்தனை தீய வழிகளுக்கு இட்டு செல்லும் என்பதையும் சொல்கிறது. இப்படியான கதையை எழுதுவது அற்புதமான சவால். இதை எழுத ஆரம்பிக்க மிகப் பெரும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்" அப்ப்டீன்னார்.

இப்போ இத்திரைப்படத்தில் அண்ணாச்சியாக யார் நடிக்கப் போகிறார் என்பதே கோலிவுட்டின் எதிர்ப்பார்பார்ப்பாம்.


இந்த படத்தை எடுக்க சரவண பவன் தரப்பு கோர்ட் தடை வாங்க முயற்சிப்பதாக கூடுதல் தகவல்

Updated On: 8 July 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  3. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  4. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  5. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  6. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  8. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  9. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!