/* */

தனது 70வது பிறந்தநாளை, குடும்பத்தினருடன் கொண்டாடிய 'கேப்டன்'

ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தே.மு.தி.க., கட்சியை துவக்கி, அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சிகளில் நடந்த முறைகேடுகளை, ஊழல்களை மேடைகளில் எரிமலையாக பேசி, அரசியல் தலைவர்களை அதிர வைத்தவர். யாருக்குமே பயப்படாத ஒரு தைரியமான, நேர்மையான மனிதராகவும், அதே வேளையில், மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் நல்ல பண்பாளராகவும் தமிழக மக்களால், பாராட்டப்படுபவர்.

HIGHLIGHTS

தனது 70வது பிறந்தநாளை, குடும்பத்தினருடன் கொண்டாடிய கேப்டன்
X

இன்று 70வது பிறந்தநாள் கொண்டாடிய ‘கேப்டன்’ விஜயகாந்த், குடும்பத்தினருடன். 

தமிழ் சினிமாவில் ‛கேப்டன்' என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். எந்த பின்புலமும் இன்றி சினிமாவில் சாதித்தவர். 1978ல் 'இனிக்கும் இளமை' படத்தில், சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் தனது பயணத்தை துவக்கிய விஜயராஜ் என்னும் விஜயகாந்த், அதன்பின் 'தூரத்து இடிமுழக்கம்' என்ற படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார்.


தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‛சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தில், நாயகனாக களமிறங்கிய இவர் அதன்பின் ‛‛வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், நானே ராஜா நானே மந்திரி, கரிமேட்டு கருவாயன், அம்மன் கோயில் கிழக்காலே, பூந்தோட்டக் காவல்காரன், கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ், சின்ன கவுண்டர், வானத்தை போல'' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, சினிமாவில் நிலையான இடத்தை பிடித்தார்.


தமிழ் சினிமாவில், 35 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய கேப்டன், 2005ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி மதுரையில் 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார். எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து பெற்று, அரசியலில் உயர்ந்தார் விஜயகாந்த்.


கடந்த சில ஆண்டுகளாக, உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் தற்போது நலமாக உள்ளார். இன்று(ஆக.,25) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். சென்னையில் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த், பிறகு தனது தேமுதிக., அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.


விஜயகாந்த்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளானர். மேலும் நடிகர் சங்கம் சார்பில் நடிகர் கார்த்தி நேரில் வந்து விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 25 Aug 2022 12:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்