/* */

ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்கும் அனிருத்..

Anirudh Salary for Rajini Movie-லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்க அனிருத் ரூ.5 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

Anirudh Salary for Rajini Movie
X

Anirudh Salary for Rajini Movie

Anirudh Salary for Rajini Movie-தமிழ் திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகி பாடகராகவும், திரைப்படங்களில் சில கௌரவ தோற்றங்களிலும் நடித்து வருபவர் அனிருத். இவருடைய முழு பெயர் அனிருத் ரவிச்சந்தர் ஆகும். அனிருத் நடிகர் ரவி ராகவேந்திரர் என்பவரின் மகன் ஆவார். இவரது தாயார் லட்சுமி ஒரு நடன கலைஞர். அனிருத், லதா ரஜினிகாந்தின் மருமகன். ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உறவினர் மகன் அனிருத். தினக்‌ஷ் என்ற இசை குழு பள்ளியில் பயின்றவர். அனிருத் தனது 21 ஆம் வயதில் 3 என்ற படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்தார்.

anirudh salary per movie , anirudh salary per movie 2022, anirudh salary for rajini movieஇது பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. இத்திரைப்படத்திற்காக ஒய் இஸ் திஸ் கொலவெறி டி என்ற ஒற்றைப் பாடல் வெளியிட்டதில் மிகவும் பிரபலமானார். 2012 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினியின் மகள் நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவரது இசையில் உருவான ஒய் இஸ் திஸ் கொலைவெறி பாடல் உலக அளவில் வெளியாகி பிரபலமானதை தொடர்ந்து இவர் தமிழ் திரை உலகில் அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்று பிரபலமானார்.

anirudh salary per movie , anirudh salary per movie 2022, anirudh salary for rajini movieஅனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிய சில ஆண்டுகளில் திரையுலாக பிரபலங்களையும் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது இசையின் மூலம் திரை உலகில் பிரபலமாக உள்ளார். இவரின் திரைப்பயணத்தில் இவர் பிலிம் பேர், விஜய் தொலைக்காட்சி விருது, எடிசன் விருது என பல விருதுகளை இசை அமைப்பாளராகவும் பின்னணிப் பாடகராகவும் பெற்று உள்ளார்.

anirudh salary per movie , anirudh salary per movie 2022, anirudh salary for rajini movieதமிழ் சினிமாவில் இந்த வருடங்களில் மட்டும் தன் இசையால் ஒட்டுமொத்த சினிமாவையும் தனக்குள் கட்டி போட்டவர் இசையமைப்பாளர் அனிருத். டான், திருச்சிற்றம்பலம், பீஸ்ட், என பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஆட வைத்தார்.

மாஸான ஹீரோக்கள் என்றால் அவர்கள் நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத்தை தான் தயாரிப்பாளர்கள் அணுகுகிறார்கள். இந்த நிலையில் ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம் தன்னுடைய அடுத்த திட்டத்தை போட்டிருக்கிறது.

anirudh salary per movie , anirudh salary per movie 2022, anirudh salary for rajini movieரஜினியை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்க போவதாக லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என லைக்கா எண்ணியது ஒரு பக்கம் இருந்தாலும்

anirudh salary per movie , anirudh salary per movie 2022, anirudh salary for rajini movieஅனிருத் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி வீதம் மொத்தம் ரூ. 10 கோடி சம்பளத்தை கேட்டிருக்கிறாராம். இதனால் அதிருப்தியில் இருந்த லைக்கா ஒரு படத்திற்கு மட்டும் அனிருத்தை கமிட் செய்து மற்றொரு படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 1 April 2024 4:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?