/* */

விஜய்யை இயக்கும் பிரேமம் இயக்குநர்! இதுமட்டும் நடந்தா...?

வங்கியிடம் படமெடுக்க லோன் கேட்டு கிடைக்காததால், வங்கியில் பணிபுரியும் யாரும் படம் பாக்க வரக்கூடாது என்று கூறி நகைச்சுவை செய்யும் இவர் அடுத்து என்ன படம் எடுக்கப்போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

HIGHLIGHTS

விஜய்யை இயக்கும் பிரேமம் இயக்குநர்! இதுமட்டும் நடந்தா...?
X

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாள்தான் பலருக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம். பட ரிலீஸின்போது கொண்டாட்டங்கள் களைகட்டும். இவரை இயக்குவதற்கு, இவரிடம் கதை சொல்லுவதற்கு ஏகப்பட்ட இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள். தான் யார் கதையில் அடுத்து நடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வரும் விஜய் இப்போது அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிப்பாரா என்றுதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் இன்ஸ்டாகிராம் தளத்தில் கணக்கைத் துவங்கினார். அறிவித்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் அவரது இன்ஸ்டா ஐடியை பாஃலோ பண்ண துவங்கிவிட்டனர். 2 மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்திலேயே 1 மில்லியன் வியூவர்களை பெற்றிருந்தார் விஜய். தற்போது வரை 5.5 மில்லியன் ரசிகர்கள் அவரை இன்ஸ்டாவின் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்ததற்கு பல சினிமா பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்தனர். அந்த வகையில் மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தான் விஜய் ரசிகர் என்றும் அவரை இயக்க ஆசைப்படுவதாகவும்கூறியுள்ளார்.

விஜய் மற்றும் சமந்தா ஓகே சொன்னால் ப்ரேமம் மாதிரி ஒரு படத்தை இயக்குவேன் என்று கூறியுள்ளார். ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இவர் அப்படி பதிலளித்துள்ளார். மேலும் விஜய் மகன் சஞ்சய் நடிப்பதாக இருந்த படத்தைப் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு நம்பிக்கை தான் வாழ்க்கை. நடக்கும் என நம்புவோம் என்று பதிலளித்துள்ளார்.

விஜய் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், அல்போன்ஸ் புத்திரன் விஜய்யை இயக்குவதைப் பற்றி பேசியிருந்தார். விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் கூறினார். அவரது உதவியாளர் ஜெகதீஸ் உதவியுடன் விஜய் சாரை சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார். நான் சொன்ன ஒன்லைன் பிடித்திருந்தால் ஒருநாள் அவர் என்னை படம் எடுக்க அழைப்பார் என்றும் நம்புவதாக கூறியிருந்தார். இப்படி பிரேமம் படம் வெளியான சமயத்திலிருந்தே தன்னை யாராவது அழைப்பார்கள் என்பது போலவே பேசிவருகிறார். இவரே போய் எந்த நடிகரிடமும் சான்ஸ் கேக்கமாட்டாரோ என்னவோ.

வங்கியிடம் படமெடுக்க லோன் கேட்டு கிடைக்காததால், வங்கியில் பணிபுரியும் யாரும் படம் பாக்க வரக்கூடாது என்று கூறி நகைச்சுவை செய்யும் இவர் அடுத்து என்ன படம் எடுக்கப்போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Updated On: 5 April 2023 1:05 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  7. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  8. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  10. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...