/* */

காதல் மன்னன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறதா?

Ajith fans celebrates 25 years of Kadhal Mannan-அந்த படம் ஹிட் ஆகி, அஜித் அவர்களுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்துவிட்டது. அஜித்தை பின்பற்றும் எல்லாருக்கும் இந்த படம் பிடிக்கும்.

HIGHLIGHTS

காதல் மன்னன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறதா?
X

இயக்குநர் சரண் - அஜித்குமார் இணைந்து கொடுத்த படம் காதல் மன்னன். அந்த படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித்குமாரின் ஆரம்ப கால படங்கள் மிக மென்மையானதாகவும் அவரை காதல் நாயகனாக காட்டுவதாக இருக்கும். அதில் முக்கியமான படம் காதல் மன்னன். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் நாயகனுக்கும் இடையே மலரும் காதல் பற்றிய சுவாரஸ்யமான படம் இது.


காதல் மன்னன் தவிர அடுத்தடுத்து 3 படங்களில் அஜித் - சரண் இணை பணியாற்றியது. அமர்க்களம் படத்தை இயக்கியதும் சரண்தான். பின்னர் 2004ம் ஆண்டு அட்டகாசம் படத்தை இயக்கினார் சரண். முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா, ஜனா படங்கள் தோல்வியடையே அவர் சரணை இயக்க அழைத்தார். அதன் பிறகு 2010ம் ஆண்டு அசல் எனும் படம் உருவானது. ஆனால் இப்படம் சரியாக மக்களால் வரவேற்கப் படவில்லை என்பதால் அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. அஜித்குமாரும் புதுமுக இயக்குநர்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார்.


இருப்பினும் சரண் இயக்கத்தில் ஒரு படம் அஜித் நடித்து வந்தால் நன்றாக இருக்குமே என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இணைந்து காதல் மன்னன், அமர்க்களம் போல படங்களைத் தந்தால் நன்றாகத் தானே இருக்கும். அதை விடுங்க, காதல் மன்னன் பட இயக்குநர் சரண் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார். அவரிடமே சில கேள்விகளை முன் வைத்தோம்.


காதல் மன்னன் படத்துக்கான தலைப்பு குறித்து பேசிய சரண், இது யாரும் தொடாத தலைப்பு அதுமட்டுமின்றி இந்த படத்தின் பெயரைக் கேட்டவுடன் அதில் ஜெமினி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் நினைவுக்கு வரும். இதனாலேயே வேறு யாரும் இந்த பெயரை தங்கள் படங்களுக்கு வைக்கவே இல்லை. இது நமக்கு சாதகமாக இருந்தது.


காதல் மன்னன் பெயரைத் தவிர இந்த காதல் படத்துக்கு பொருத்தமான வேறு பெயர் எதுவும் எங்களுக்கு தோன்றவில்லை. இது சரியாக இருக்கும் என நம்பினோம் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் காதல் கோட்டை உள்ளிட்ட சில படங்கள் இதே பெயரில் அதாவது காதல் என முன்னோ பின்னோ பெயர் வைத்து வெளியாகி அனைத்துமே ஹிட் ஆனது. இதனால் பயந்துகொண்டே இருந்தேன் நல்லவேளையாக அந்த படம் ஹிட் ஆகி, அஜித் அவர்களுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்துவிட்டது. அஜித்தை பின்பற்றும் எல்லாருக்கும் இந்த படம் பிடிக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்