/* */

உங்க காலைவணக்கம் மத்தவங்களை ஊக்கப்படுத்தணும்.... படிச்சு பாருங்களேன்...

Good Morning Motivational Quotes Tamil-மனிதர்களின் வாழ்நாள் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் நாம் மற்றவர்களுக்கு காலை வணக்கம் சொல்வது வழக்கம். அது புத்துணர்ச்சிஊட்டும் விதமா இருக்கணும்....

HIGHLIGHTS


Good Morning Motivational Quotes Tamil-மனிதர்களின் வாழ்நாள் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் நாம் மற்றவர்களுக்கு காலை வணக்கம் சொல்வது வழக்கம். அது புத்துணர்ச்சிஊட்டும் விதமா இருக்கணும்....மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரின் வாழ்க்கையையுமே தினந்தோறும் புதுப்பிக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் பரபரப்பான வாழ்க்கை... டென்ஷன்..டென்ஷன்.. என நாள் முழுக்க அலைந்து திரிந்து விட்டு ஆபிசில் வேலைபார்த்துவிட்டு இரவில் மட்டுமே நிம்மதியான உறக்கம். ஆனால் அந்த உறக்கத்திற்கும் தற்போது கையி்லுள்ள ஸ்மார்ட்போனில் உள்ள டிவிட்டர், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கத்தினால் 8மணிநேர உறக்கத்துக்கும் தடை வந்துவிடுகிறது. இதனால் எப்போதும் மனம் அமைதியான நிலையில் இருப்பதில்லை. இவ்வளவையும் சகித்துக்கொண்டு காலையில் எழுந்ததும் எல்லோரும் பல் தேய்ப்பார்கள் . ஆனால் இக்கால தலைமுறை முதல் அக்காலத்தினர் வரை அனைவரும் புதுப்பழக்கம் மேற்கொண்டுள்ளனர் யாராவது ஏதாவது மெசேஜ் அனுப்பியுள்ளனரா? என பார்ப்பதற்காக காலை எழுந்தவுடன் செல்லைத்தான் தேய்க்கின்றனர். அதற்கு பிறகுதான் பல்லை தேய்ப்பது வழக்கப்படுத்தியுள்ளனர்.

மனிதனுக்கு நிம்மதி எப்போது கிடைக்கும் தெரியுமா? அவர்கள் இரவில் நல்லஉறக்கம் உறங்கும்போதுதாங்க. அதிலும் பலருக்கு போன்மேல் போன் வந்து துாங்கவிடாமல் செய்து விடுவதும் உண்டு. சரிங்க... நாள் முழுக்க பிரச்னையோடுதான் வாழறோம். காலையில் எழுந்திருக்கும்போது அமைதி கிடைக்குமா? ஆமாங்க... ஒருசிலர் அனுப்பும் காலைவணக்கம் மெசேஜ் ஐ பார்க்கும்போது மனம் அமைதியுறுகிறது. ஆனால் ஒரு சிலர் அதற்கும் பதில் அளிக்க மாட்டார்கள். சரி அவருக்கு என்னவோ பிரச்னை போல என இருந்துவிடுவோரும் உண்டு. அவர் ஏன் நமக்கு பதில் குட்மார்னிங் மெசேஜ் போடவில்லை என குழம்பிபோவோரும் உண்டு.

அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யப்படும் காரியங்கள் நிச்சயம் வெற்றியை மட்டுமே தரும். அதனால்தான் பிள்ளைகளை காலை நேரத்தில் எழுந்து படிக்க சொல்லுங்கள்... என சொல்கிறார்கள். மனம் அமைதியுடன்இருக்கும்போது படிப்பது மனதில் நன்கு பதியும். ஓசோன் காற்று சுற்றுப்புற அமைதி என பல பாசிடிவ் கருத்துகள் உள்ளன.சரிங்க..... உங்களுக்கு யாராவது ஒருவராவது சோஷியல் மீடியாவில் காலை வணக்கம் சொல்வதுண்டா... வாங்க பார்க்கலாம்.

வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல.. எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே..

புதிய மற்றும் வெற்றிகரமான நாளைத் துவங்க இனிய காலை துாய காற்று

விதையோ வினையோ விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு...காலை வணக்கம்

நேற்று ஒரு நல்லநாள் என்றால் நிறுத்த வேண்டாம். ஒரு வேளை உங்கள் வெற்றியின் தொடக்கம் தொடங்கியிருக்கலாம்... வணக்கம்

இந்த கணம்தான் உண்மை. இதைத்தவிர்த்து மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும் தான்.

தோல்வி என்பது வெற்றிக்கு நேர்மாறானது அல்ல. ஆனால் அதன் ஒரு பகுதி மட்டுமே அதை எப்போதும் நினைவில் கொள்ளுங்க...

கிழக்கிலிருந்து சூரியன் வெளியே வருகிறது...உங்கள் நினைவோடு நாள் தொடங்கியது... நான் உங்கள் இதயத்துடன் சொல்லவிரும்புகிறேன்..

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி.. விழுந்த போதெல்லாம் எழுந்தான் பல மடங்கு சக்தியுடன்... என்பது மிகப்பெரிய வெற்றி...

கனவுகள் மெய்ப்பட கடினமாக உழை... காட்சிகள் கண்ணில் பிம்பங்களாய் தோன்றினாலும்.. நீ நினைத்தால் ஒரு நாள் நிழலும் நிஜமாகும்...

பாதைகள் தொடர்ந்தால் நம் பயணங்கள் முடியாது... விழுந்தவுடன் துணிவுடன் எழுந்தால் இனி வெற்றி மட்டும் தான் வரலாறு...

உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டுமே தேவை... நிறைய பொறுமை, வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தும் திறமை, தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை, தவறு செய்தவர்களை அணைத்துச் செல்லும் கனிவுடைமை.

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லைஆனாலும் எதிர் பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை.இனிய காலை வணக்கம்!

இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால்நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது.காலை வணக்கம்!

துன்பம் நேர்ந்த காலத்தை மறந்து விடுஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.இனிய காலை வணக்கம்!

உன்னை நம்புஉன் உழைப்பை நம்புஅதிர்ஷடத்தையே நம்பாதே.

ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.இனிய காலை வணக்கம்!

உன்னை போல இந்த உலகில் யாரும் இல்லைஅதற்கு உன் கை ரேகைகளே சாட்சி!இனிய காலை வணக்கம்!

முன் வைத்த காலை பின் வைக்காதே வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய்.அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விடநிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும்.இனிய காலை வணக்கம்!

தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம் பனிக்கட்டியாக ஆகும் வரை காத்திருந்தால்.இனிய காலை வணக்கம்!

ஆவலாய் காத்திருக்கிறோம்மழைக்காக குடையும்உனக்காக நானும்காலை வணக்கம்!

இந்த உலகில் நீ மாற்றத்தை விரும்பினால்முதலில் உன்னிடம் இருந்து தொடங்கு.

நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவைஉயிரும் ,நேரமும் ,சொற்களும்.இனிய காலை வணக்கம்!

வேதனைகளை வென்று விட்டால் அதுவே ஒரு சாதனை தான்.இனிய காலை வணக்கம்!

எல்லா சமயமும் கூறுவது தீமையை செய்யாதே நன்மையை செய்.இனிய காலை வணக்கம்!

உதிக்கும் சூரியனை போலஉங்கள் வாழ்க்கை நன்கு மிளிரட்டும்.

தோல்வி உன்னை துரத்தினால்வெற்றியை நோக்கி நீ ஓடு

தலையணையின் அணைப்பிலிருந்துகனவுகளின் பிணைப்பிலிருந்துநித்திரையின் அணைப்பிலிருந்துஇமைகளை அவிழ்த்துநேற்றை மறந்து இன்றை தொடர் இனிய காலை வணக்கம்!

கதிரவனின் கடை கண் பார்வையில்மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள்

புன்னகையுடன் தொடங்குபூக்களாக நிறையட்டும்இந்த தினம்.

புன்னகையும் மௌனமும்மிக பெரிய ஆயுதங்கள்புன்னகை பல பிரச்னைகளை தீர்க்கும்

மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும்.காலை வணக்கம்!

வாழ்க்கைஒரு ரோஜா செடி மாதிரிமுள்ளும் இருக்கும்மலரும் இருக்கும்முல்லை கண்டு பயந்து விடாதேமலரை கண்டு மயங்கி விடாதே.இனிய காலை வணக்கம்!

விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீமுடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திருசாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!

தவறி விழுந்த விதையே முளைக்கும் போதுதடுமாறி விழுந்த உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா.காலைவணக்கம்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 April 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!