/* */

Actress Pooja Hegde gets injured-நடிகை பூஜா ஹெக்டேவின் பூ போன்ற கால்களில் காயமாம்..! படப்பிடிப்பில் கணுக்காலில் காயம்..!

Actress Pooja Hegde Gets Injured -நடிகர் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வரும் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பின் போது, பூஜாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

HIGHLIGHTS

Actress Pooja Hegde gets injured-நடிகை பூஜா ஹெக்டேவின் பூ போன்ற கால்களில் காயமாம்..! படப்பிடிப்பில் கணுக்காலில் காயம்..!
X

Actress Pooja Hegde gets injured-நடிகை பூஜா ஹெக்டே.(கோப்பு படம்)

Actress Pooja Hegde Gets Injured -விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டேக்கு காலில் தசைநார் (ligament tear) கிழிந்ததாகத் தெரிகிறது. ஓய்வில் இருக்கும் அவர் காலில் கட்டுடன் இருக்கும் படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

Actress Pooja Hegde gets injured

அதில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறால் பூஜாவின் இடது காலில் தசைநார் கிழிந்ததாகதெரிய வந்துள்ளது. தற்போது அவர் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். காலில் கட்டுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ள பூஜா ஹெக்டே, "ஓகே லிகமென்ட் டியர்" என்று குறிப்பிட்டிருந்தார்.


சல்மான் கானுடன் அவர் இணைந்து நடித்து வரும் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் பூஜாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவரை இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து 'சர்க்கஸ்' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார் பூஜா. அதோடு த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு 'SSMB28' என்று தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Actress Pooja Hegde gets injured

நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் ஜீவாவுடன் 'முகமூடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நல்ல பிரபலமடைந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார். தற்போது 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் தவறி கிழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவருடைய இடது காலில் தசைநார் கிழிந்துள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவ்வாறு ஓய்வெடுக்கும் படங்களைத்தான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பகுதியில் பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார். இந்த நிலையிலும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மேக்கப் போடும் படத்தையும் அதில் இணைத்துள்ளார். அவரது காலில் அடிபட்ட படங்களைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைவில் அவர் பூரண நலமடைய வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


'பூ போன்ற உன் கால்களில் காயம்பட்டால் எங்கள் மனம் தாங்குமா?' என்று ரசிகர்கள் கேட்காத ஒன்றுதான் குறை.

தெலுங்கு சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக பூஜா ஹெக்டே கருதப்படுகிறார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் "மிகவும் விரும்பத்தக்க பெண்" என்றும், 2017ம் ஆண்டின் "ஹைதராபாத் மோஸ்ட் டிசைரபிள் வுமன்" என்ற வெற்றியாளர் பட்டியலில் பூஜா ஹெக்டே இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜா ஹெக்டே பல பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளுக்கு விளம்பர ஒப்புதல் அளிப்பவராகவும் உள்ளார். 2021ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்கள் வரிசையில் இன்ஸ்டாகிராமில் பூஜா ஹெக்டே 7வது இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 Oct 2022 6:28 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்