/* */

நில வரி செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்? நோட்டீஸ் அனுப்பிய வருவாய் துறை

நில வரி செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மராட்டிய மாநில நில வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

HIGHLIGHTS

நில வரி செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்? நோட்டீஸ் அனுப்பிய வருவாய் துறை
X

நடிகை ஐஸ்வர்யா ராய்.

தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் கடந்த செப்டம்பர் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் மராட்டிய மாநில நில வருவாய் துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இதற்கு ஓராண்டாக நில வரி ரூ.21 ஆயிரத்து 960 செலுத்தவில்லை என்றும், பல தடவை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரியை செலுத்தாததால் ஐஸ்வர்யா ராய்க்கு சின்னார் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 10 நாட்களுக்குள் நில வரியை செலுத்தாவிட்டால் ஐஸ்வர்யா ராய் மீது நில வருவாய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோல் அங்கு நிலம் இருந்தும் வரி செலுத்தாத மேலும் 1200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On: 19 Jan 2023 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...