உங்க மொபைல் தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க பாஸ்..கண்டுபிடிச்சிடலாம்

தொலைந்துபோன மொபைல்களில் உள்ள ரகசிய தகவல்களை காக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உங்க மொபைல் தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க பாஸ்..கண்டுபிடிச்சிடலாம்
X

காணாமல் போன மொபைலை கண்டுபிடிக்கும் முறை (மாதிரி படம்)

உங்க மொபைல் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிச்சுடலாம். நம்ம போன்ல எல்லாத்தையும் லாக் கூட செய்யலாம்.

செல்போனை தவற விட்டால் முதலில் பதறாமல் இருக்க வேண்டும். நாம இருக்கும் இடத்தில் இருந்தே நம்ம மொபைலை கண்டுபிடிச்சிடலாம். அதுமட்டும் இல்லிங்க.. நம்முடைய போனில் மிக முக்கிய செய்திகள் மற்றும் ஃபைல்ஸ் அல்லது ஏதாவது ரகசியமாக வைத்திருந்தால் கூட,அது பற்றி கவலை கொள்ளத்தேவை இல்லை. நமது முக்கிய தகவல்களை திருட முடியாதபடி லாக் பண்ணலாம். அதாவது காணாமல் போன அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை யாரும் எடுத்துவிட முடியாதபடி நாம் லாக் செய்ய முடியும். அல்லது தவறவிட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை நாமே அழிக்கவும் முடியும்.

இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போமா? எப்பிடி ? எங்கே இருந்து இந்த வசதி கிடைக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

Find my device மூலம் இதை எளிதாக செய்ய முடியும். முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள். பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை login செய்ய வேண்டும். உங்களின் email and password கொடுத்த பின்பு லாக்இன் ஆகும்.

அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock, erase என்ற 3 தகவல்கள் இருக்கும். ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும். play sound கிளிக் செய்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும். lock ஆப்சனை கிளிக் செய்தால் செல்போன் லாக் ஆகி விடும். erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும். அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். ஓகேவா புரோ..? இந்த யூஸ்புல் தகவலை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

Updated On: 3 Sep 2021 12:31 PM GMT

Related News

Latest News

 1. திண்டிவனம்
  உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி
 2. செஞ்சி
  குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்
 3. கரூர்
  கரூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு
 4. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
 5. தமிழ்நாடு
  அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு ...
 6. மயிலம்
  சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
 7. ஜெயங்கொண்டம்
  ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
 9. வாணியம்பாடி
  கொரோனா தடுப்பூசி போடும் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
 10. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 1,189 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்