/* */

நரிக்குறவர்கள் நல வாரிய உறுப்பினர்கள் நலத்திட்டங்களை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்டங்களின் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

நரிக்குறவர்கள் நல வாரிய உறுப்பினர்கள் நலத்திட்டங்களை பெற  விண்ணப்பிக்கலாம்
X

விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்.

விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் பதிவு பெற்ற தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகை ரூ.1,00,000/-ம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ10,000 முதல் 1,00,000/- வரையும், இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை ரூ.20,000-ம், ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை ரூ. 5,000/-ம் வழங்கப்படுகிறது.

மேலும், கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.50/- 10 மாதங்களுக்கு ரூ.500/-ம், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு மாதம் ரூ.100/-ம் 10 மாதங்களுக்கு ரூ.1,000/-ம், பத்தாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ.1,000/-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1,000/-ம், 11- ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ.1,000/-ம், 12-ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ.1,500/-ம் வழங்கப்படுகிறது.

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500/-ம், முறையான பட்டப் படிப்பிற்கு ரூ.1,500/-ம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப்படிப்பிற்கு ரூ.1,750/-ம், முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.4,000/-ம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்ட மேற்படிப்பிற்கு ரூ.5,000/-ம், தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கு ரூ.4,000/-ம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழில்கல்வி பட்டப் படிப்பிற்கு ரூ.6,000/-ம், தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பிற்கு ரூ.6,000/-ம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பிற்கு ரூ.8,000/-ம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு ரூ.1,000/-ம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய ஐ.டி.ஐ. அல்லது பல்தொழில்பயிற்சி படிப்பிற்கு ரூ.1,200/-ம் வழங்கப்படுகிறது.

திருமண உதவித் தொகை ரூ.2,000/-ம்,மகப்பேறு உதவித் தொகையாக, மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் ரூ.6,000/-ம், கருச்சிதைவு /கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3,000/-ம், மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை ஈடுசெய்தல் ரூ.500/ம், முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1,000/-ம் வழங்கப்படுகிறது.

தொழில் தொடங்க மானியம்: சுயதொழில் தொடங்க (அ) தனிநபர் தொழில் தொடங்க முழுமானியம் ரூ.7,500/-ம், குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்க மானியம் தனிநபருக்கு ரூ. 10,000/-ம், அல்லது குழுவிற்கு அதிகபட்சமாக ரூ.1,25,000/-ம் வழங்கப்படுகிறது. மேற்படி, நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு இந்நல வாரிய உறுப்பினராக பதிவு பெறத் தகுதியுடைய நரிக்குறவர் இனத்தைச் சார்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றும், நலத்திட்ட உதவிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் தகுந்த சான்றுகளுடன் பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Aug 2021 5:00 AM GMT

Related News