/* */

அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி தொடங்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்

அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டுமென விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி தொடங்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்
X

இந்திய மாணவர் சங்க விழுப்புரம் மாவட்ட சட்டக்கல்லூரி மாணவர் கிளை மாநாடு விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டுமென மாணவர் சங்கம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய மாணவர் சங்க மாநாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

இந்திய மாணவர் சங்க விழுப்புரம் மாவட்ட சட்டக்கல்லூரி மாணவர் கிளை மாநாடு விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எழிலரசன் தலைமை வகித்தார். மாநாட்டில் கடலுார் மாவட்ட செயலாளர் குமரவேல், விழுப்புரம் மாவட்ட வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சே.அறிவழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். முன்னதாக அமைப்பு கொடியை மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்‌.பார்த்திபன் கொடியை ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில்,கல்வி நிலையங்களில் நடைபெறுகின்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றிட வேண்டும்.தமிழக அரசு சட்டக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். விழுப்புரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியை உடனடியாக திறக்க வேண்டும்.சாதிய வன்கொடுமைக்கு கல்வி நிறுவனங்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

தமிழக அரசு சட்டக் கல்லூரியை அனைத்து மாவட்டங்களிலும் வரும் கல்வி ஆண்டில் உருவாக்கப்பட்ட வேண்டும்.சட்டக் கல்வி கடைச் சரக்காவதை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர், மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக கிளை தலைவராக எம்.எழிலரசன், செயலாளராக மகேந்திரன் ஆகியோரும், துணை செயலாளராக நவின், துணைத்தலைவராக கார்த்திக் உட்பட 10 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 31 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!