/* */

முகையூர் ஒன்றியத்திலிருந்து மூன்று கிராமங்களை நீக்குவது குறித்த கருத்து கேட்பு

முகையூர் ஒன்றியத்தில் இருந்து வந்த மூன்று கிராமங்களை நீக்குவது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கவுள்ளது.

HIGHLIGHTS

முகையூர் ஒன்றியத்திலிருந்து மூன்று கிராமங்களை  நீக்குவது குறித்த கருத்து கேட்பு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கொங்கராயனூர், பையூர் மற்றும் மாரங்கியூர் ஆகிய ஊராட்சிகளை முகையூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நீக்கம் செய்து, திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் சோப்பது குறித்து முதல் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் விழுப்பரம் மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் வருகின்ற (05.01.2022) அன்று முற்கபல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் உத்தேசிகப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய எல்லைகள் உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே உள்ள ஊராட்சி ஒன்றிய எல்லைகள் தொடருதல் குறித்து விவரிக்கப்படும். மேலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சம்மந்தபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், அங்கீகரிகப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சம்மந்தப்பட்ட பகுதியில் குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு முகையூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய எல்லைகள் மறுவரையறை செய்வது தொடர்பான கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Dec 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...