/* */

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்து கொள்ள காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அதை 2014 - 19ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புதுப்பிக்கத் தவறியவா்கள், தங்களது பதிவை 2022 மாா்ச் 1-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசு 2014 முதல் 19ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பயன்பெறும் வகையில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அரசாணை எண்.548-இன்படி, சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் 3 மாதங்களுக்குள், அதாவது மாா்ச் 1-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தின் மூலம் தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம்.

2014 முதல் 19ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புதுப்பிக்கத் தவறி மீண்டும் பழைய பதிவுமூப்பின்றி புதிதாக பதிவு செய்தவா்களும், மீண்டும் பழைய பதிவை பெறும் வகையில் புதுப்பித்துக்கொள்ளலாம்.

மேலும், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்தும் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என ஆட்சியா் மோகன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .

Updated On: 13 Dec 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!