/* */

இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக போராட்டம்

விழுப்புரத்தில் பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்க.ஜோதி தலைமை வகித்தார். பாமக அரசியல் ஆலோசனை குழு தலைவர் தீரன், புதுவை மாநில அமைப்பாளர் முன்னாள் எம்.பி.தன்ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று மாவட்டஆட்சியரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து சென்றனர். ஏராளமான கூட்டம் திரண்டதால் மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

Updated On: 29 Jan 2021 9:45 AM GMT

Related News