/* */

ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.

HIGHLIGHTS

ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
X

தமிழக விவசாய சங்க மாநாட்டில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் நிர்வாகிகள். 

திண்டிவனத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டிவனம் வட்டக்குழு சார்பில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தனபால் சங்க கொடி ஏற்றி வைத்தார். சுந்தர் வேலை அறிக்கையை வசித்தார். பார்கவுன்சில் கோதண்டம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன் கலந்து கொண்டு மாநாடு நிறையுரை ஆற்றினார்.

மாநாட்டில் கட்சி வட்ட செயலாளர் ராமதாஸ் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாநாட்டில் ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் ஏரி குளங்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநாட்டில் புதிய திண்டிவனம் வட்டத் தலைவராக செல்வராஜ், வட்ட செயலாளராக ராமகிருஷ்ணன், வட்ட பொருளாளராக சுந்தர் ஆகியோர் உட்பட 21 பேர் கொண்ட புதிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டிவனம் வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 9 Aug 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...