/* */

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 200 ஐ கடந்ததால் காளை விடும் நிகழ்வுக்கு தடை

வைரஸ் தொற்று காரணமாக மாவட்டத்தில் காளைவிடும் விழாக்கள் மஞ்சுவிரட்டு விழாக்களுக்கு தடை விதிக்கப்படும் என்றார் ஆட்சியர்

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு 200 ஐ கடந்ததால் காளை விடும் நிகழ்வுக்கு தடை
X

  வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 200 தாண்டியதால் காளை விடும் விழாக்களுக்கு தடைவிதிக்கப்படுவதாகவும், அரசு அனுமதியளித்தாலும் கொரோனா தொற்று காரணமாக அனுமதியளிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே கழணிப்பாக்கம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நில அதிர்வு கண்டறியும் கருவியை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சென்னை புவியியல் ஆய்வு மையத்தின் புவியியல் வல்லுநர்கள் சிவகுமார், ஓ.பி. சிங் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் மேலும் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று இன்று 200-க்கும் மேல் தாண்டியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் விதிகளை கடுமையாக்க இருக்கிறோம் . சிஎம்சி மருத்துவமனையின் ஊழியர்கள் 20-பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 40பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பொங்கல் பண்டிக்கையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காளை விடும் விழா நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். அரசு அனுமதியளித்தாலும், கொரானா வைரஸ் தொற்று காரணமாக மாவட்டத்தில் காளைவிடும் விழாக்கள் மஞ்சுவிரட்டு விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது .மேலும் மாநில எல்லைகளில் இன்று முதல் சந்தேகப்படும் நபர்களுக்கு பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கபடுவார்கள் .நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம் விதிகள் கடுமையாக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் கொரானா விதிமுறைகள் கடுமையாக்கப்படும் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி செல்ல வேண்டும் என அவர் கூறினார்.


Updated On: 6 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?